வேலூர் தொகுதியில் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் மஜகவின் முன்னாள் வேட்பாளர்…

image

வேலூர்.அக்.27., கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம்  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடையா விட்டாலும், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளரும், முன்னாள் வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான S.S.ஹாரூன் ரசீது அவர்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில், (பொதுமக்கள் கோரிக்கைகளில்) ஒன்று “வேலூர் ஓல்டு டவுன் குடிநீர் தேக்க தொட்டி பராமரிப்பு”.

வேலூர் சார்பனமேடு பகுதியில் அமைந்துள்ள இந்த குடிநீர்தேக்கத் தோட்டி பல்லாயிரக்கணக்கான, ஏறத்தாழ 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் ஜீவாதாரமாக திகழ்ந்து வருகின்றது.

மேற்கண்ட குடிநீர் நீர்தேக்க தொட்டி பராமறிப்பற்ற நிலையிலும், நீரேற்று நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கியும், நீர்தேக்க தொட்டி திறந்த நிலையிலும், இத் தொட்டியின் உள் புறத்திலும், வெளிப்புறத்திலும் கோடிக் கணக்கில் கொசுக்கள் இருப்பதாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் குடிநீராக உபோயோகிக்கும் இந் நீர் தேக்க தொட்டி மாநகராட்சியின் நிர்வாக அலட்சியப்போக்கால் குடிநீர் மாசடைந்துள்ளது.

தமிழகத்தையே அச்சுறுத்துகின்ற டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற ஆட்கொல்லி நோய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறியதை உணர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியினர், முன்னாள் சட்டமன்ற வேட்பாளர் S.S.ஹாரூன் ரசீது அவர்களின் தக்க ஆலோசனையின் அடிப்படையில், இந்த சுகாதார சீர்கேட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை போர்க்கால அடிப்படையில் அணுகினர்.

அதன் தொடர்ச்சியாக மஜகவினர் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.

பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த மாநகராட்சி ஆணையர் மஜகவினர்கள் வைத்த தொடர் அழுத்தத்தால் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று உடனடியாக குடிநீர் தேக்க தொட்டியின் சுற்றுப்புறச்சுவற்றை கான்கிரீட் சுவராக்கி உயர எழுப்பவும், பல ஆண்டுகளாக “மூடி” அமைக்காமல் திறந்தநிலையில் இருந்த பல லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டிக்கு மூடிஅமைக்கவும் உத்தரவிட்டு இப் பணிக்காக ரூ.25,00,000/- (இதுபத்தைந்து லட்சம் ரூபாய்) நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத, குறிப்பாக சாலைகள் அமைத்தல், மின்கம்பங்கள் அமைத்தல், துப்புறவு பணிகள், குப்பைகள் அகற்றுதல் மற்றும் பல சமுதாய பணிகளை மனிதநேய ஜனநாயக கட்சினர்கள் ஆய்வு செய்து வருவகின்றனர்.

இன்று தமிழக  மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடூரமான ஆட்கொள்ளி நோயான டெங்குக் காய்ச்சல் மிக வேகமாகப் பரவி மக்களும் பரவலாக பாதிக்கப்பட்டு வருவதால்  டெங்கு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதுடன் வேலூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்ற பல்வேறு மக்கள் நல பணிகளில்
மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
27.10.2017.