கடலூர்.ஜூன்.21., நேற்று கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை உதயமானது. இதில் மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் படியியல் மஜக தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. கடலூர் தெற்கு மாவட்டம். #MJK_IT_WING 20.06.2017
புதிய கிளை
அல் அய்னில் MKP புதிய கிளை துவக்கம்…
யூ.ஏ.இ.ஜூன்.20., இன்று அல் அய்ன் மண்டலத்திற்குட்பட்ட மரக்கானியாவில் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் அமீரக ஆலோசகர் J.சேக்தாவுது, அல் அய்ன் மண்டல செயலாளர் S.முகம்மது இம்ரான், பொருளாளர் பூதமங்களம் ஜாகிர் உசேன், துணை செயலாளர் இலந்தங்குடி M.யூசுப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ் விரைவில் கிளை நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். மண்டல துணை செயலாளர் அறந்தாங்கி அப்துல்லா அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை செய்திருந்தார். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய கலாச்சார பேரவை. ஐக்கிய அரபு அமீரகம். #MKP_IT_WING 20.06.2017
பழனி ஆயக்குடியில் மஜகவின் புதிய கிளை மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி…
திண்டுக்கல்.ஜுன்.16.,நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியம் ஆயக்கூடியில் கொடி ஏற்றும் விழா மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் U .மரைக்காயர் சேட், இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கட்சியின் புதிய கொடியை மாநில துணைசெயலாளர் திண்டுக்கல் M.அன்சாரிஅவர்கள் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் வானவில் காதர் அவர்கள், கொள்கை விளக்க அணி மாநில துணைசெயலார் C.A.சாந்து முகமது ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் S .ஜாபர் , R .உமர் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.பிர்தெளஸ், இளைஞரனி ஒன்றிய செயலாளர் A J .ஜவகர், ஒன்றிய செயலாளர் A.ராஜா முகமது, நகர செயலாளர் சையது காதர் மற்றும் பழனி ஆயக்குடி, பாலசமுத்திரம் மனிதநேய சொந்தங்கள் திரளாக பங்கேற்றனர். இறுதியாக ஆயக்குடியில் மஜகவின் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது, அதிகபடியாக கிளைகள் அமைத்து கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவுசெய்யபட்டது. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, திண்டுக்கல் மாவட்டம். #MJK_IT_WING 16/06/2017
வேலூர் கணியம்பாடி ஒன்றியத்தில் மஜக புதிய கிளைகள் துவக்கம்..!
வேலூர்.மே.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி கணியம்பாடி ஒன்றியத்தில் 2 புதிய கிளைகள் துவக்கம். மாவட்ட அமைப்புகுழு முஹம்மத் ஜாபர் அவர்கள் முன்னிலையில், பென்னாத்தூர் பேரூராட்ச்சி 3 வது வார்டு சப்தலிபுரம் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். கிளை செயலாளர் : பியாரு கிளை பொருளாளர் : ரசூல் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். வேப்பம்பட்டு ஊராட்சி கிளை கிளை செயலாளர்: அப்சல், கிளை பொருளாளர் : ஷயின்ஷா துணை செயலாளர்கள் : இம்தியாஸ், மதீன், பசல், இளைஞர் அணி செயலாளர் : முன்னா ஆகியோர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மனிதநேயத்துடன் சகோதரர்கள் களப்பணி சிறக்க இறைவனை பிரார்த்திப்போம். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING, வேலூர் கிழக்கு மாவட்டம். 25.05.2017.
கமலாபுரத்தில் மஜகவின் புதிய கிளை உதயம்…
திருவாரூர்.மே.21., திருவாரூர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை கமலாபுரத்தில் இன்று 21/05/2017 துவங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் அத்திக்கடை லியாகத் அலிமற்றும் அடியக்கமங்கலம் நிஜாமுதீன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர் கனி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கூத்தாநல்லூர் ஜபுருல்லாஹ், பொதக்குடி கிளை செயலாளர் ஜமால் முகம்மது மற்றும் புலிவலம் கிளை செயலாளர் சேத்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. இதில் முக்கிய நிகழ்வாக அமல்ராஜ், அன்புராஜ், ஐயப்பன், ராஜ்கிரண், சரண்ராஜ், கவியரசன், பிரசாத், பிரவீன்ராஜ், ரகுவரன், மற்றும் முரளி ஆகியோர் 11 நபர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் #MJK_IT_WING 21.05.2017