சென்னை.ஏப்.23., நாட்டின் பாரம்பரியமான் நீர் வளங்களில் ஒன்றான காவேரி நீர் தமிழகதிற்கு தர வேண்டியும், காவேரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியும், அறவழியில் போராடிய மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத் மற்றும் மஜக நிர்வாகிகளை, இன்று புழல் மத்திய சிறையில் நேரில் சென்று சந்தித்த மஜகவின் மாநில இளைஞர் அணி நிர்வாகிகள். இதில் மாநில செயலாளர் SG.அப்சர் சையத், மாநில பொருளாளர் A.மன்சூர் அஹமத், மாநில துணை செயலாளர்களான கேளம்பாக்கம் N.அன்வர்பாஷா, மற்றும் தாம்பரம் தாரிக் ஆகியோர் சந்தித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை. 23.04.18
செய்திகள்
மஜக 3ஆம் ஆண்டு துவக்க விழா.! கத்தாரில் MKP சனாயா மண்டலம் நடத்திய இரத்த தான முகாம்…!!
கத்தார்.ஏப்.23., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மூன்றாம் ஆண்டு துவாக்கத்தை முன்னிட்டு அதன் வெளிநாடுகள் பிரிவான #மனிதநேய _கலாச்சார_பேரவை (MKP) கத்தார் சனாயா மண்டலம் #இரத்த_தான முகாம் சார்பில் நடைபெற்றது. இரத்த தான முகாமை #கத்தார் அலோசகர் கீழக்கரை ஹூசைன் துவக்கிவைத்தார். சனாயா மண்டல செயலாளர் நூர் முஹம்மத் தலைமை தாங்கினார். இதில் சனாயா மண்டல பொருளாளர் காட்டுமன்னார் கோயில் ஓளியுள்ளா, துஹைல் மண்டல செயலாளர் ஹாஜ் முஹம்மத், தோஹா மண்டல செயலாளர் பொதக்குடி புர்ஹானுதீன், சனாயா மண்டல துணை செயலாளர் முத்துப்பேட்டை யூனுஸ், அணி Al million நிர்வாகிகளாகிய திருமங்களம் சுந்தர்., வீரபாண்டி, மேலும் கத்தார் செயலாளர் உத்தமபாளையம் உவைஸ், கத்தார் பொருளாளர் ஆயங்குடி யாசீன், கத்தார் ஒருங்கிணைப்பாளர் நெல்லை KST அப்துல அஜீஸ், துணை செயலாளர்கள் தைக்கால் சகாபுதீன், புதுமடம் பைஸல், மீசல் செய்யது கனி, சந்கேந்தி சமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பல தோழமைச்சகோதரர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மிகவும் ஆர்வத்துடன் இரத்ததானம் கொடுத்தனர். தகவல் : #MKP_IT_WING #MKP_சனாயா_மண்டலம் #கத்தார்_மனிதநேய_கலாச்சார_பேரவை
ஆசிபாவிற்கு நீதிகேட்டு குடியாத்ததில் மஜக கண்டன ஆர்பாட்டம்…!
வேலூர்.ஏப்.22., காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று 22/04/2018 மாலை 4.00 மணியளவில் வேலூர் மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர்கள் , S.M.ஷாநவாஸ், T.R. முன்னா (எ) நஸீர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வாஸ் அக்மல், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுதீன், MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் அஹ்மத், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் C.அன்வர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் திருமங்கலம் #J_ஷமீம் அஹ்மத், INSAAF அமைப்பின் மாநில துணை செயலாளர் ஆலியார் அதாவுல்லா, நாம் தமிழர் கட்சி வேல்ராஜ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மாநில துணை செயலாளர் J.M.வசீம் அக்ரம், மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரிப், ஆம்பூர் பிர்தோஸ், வாணியம்பாடி நயீம் கான் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் சிறுமி ஆசிபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்,மேலும் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு கடுமையான
ஆசிஃபாவுக்கு நீதி கேட்டு கோவையில் மஜக ஆர்ப்பாட்டம்!
கோவை.ஏப்.22., காஷ்மீரில் 'இந்து ஏக்தா மன்ஜ்' அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம் தழுவிய அளவில் மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட மஜக சார்பில் #நீதிகேட்டு_போராட்டம் நடைபெற்றது. பல்வேறுபட்ட சமூகங்களை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழக்கங்கள் எழுப்பினர். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை தூக்கிய படியே நின்றனர். ஆர்ப்பாட்டம் நடந்த சாலை வழியே சென்ற பொது மக்களும் ஆங்காங்கே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர். வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் சூழ்ந்த முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தனர். சிறுமி ஆஷிபாவின் உடலை போன்று வடிவமைத்து கைகளிலேந்தி சாலையில் மஜகவினர் ஊர்வலமாக வந்ததை பார்த்த மக்கள் கண் கலங்கினர். மேலும் குற்றவாளிகள் போன்ற வேடம் தரித்து முகமூடி அணிவித்து தூக்கு கயிற்றை மாட்டி நால்வரை மஜகவினர் அழைத்து வந்ததை ஆங்காங்கே குழுமியிருந்த மக்களும், வாகனங்களில் சென்றவர்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். மஜக கிணத்துகடவு
நாகை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிட திறப்பு விழா! அமைச்சர், MLA பங்கேற்ப்பு!
நாகை. ஏப்.22., அரசு மருத்துவமனையில் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் O.S மணியன் திறந்து வைக்க சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ICU நோயாளிகளுக்கு துணையாக வருபவர்கள், மருத்துவமனையில் ஆங்காங்கே படுத்துறங்குவதை தவிற்பதற்காக, நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் மட்டுமே தங்குவதற்காக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 840 ச.மீட்டரில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 90 பேர் தங்கிக் கொள்ளலாம். சமையலறை, குளியளறை பொருள் பாதுகாப்பு அறை ஆகிய வசதிகலும் இருக்கிறது. தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் 22.04.2018