கோவை.ஏப்.22., காஷ்மீரில் ‘இந்து ஏக்தா மன்ஜ்’ அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுக்க போராட்டம் நடந்து வருகிறது.
தமிழகம் தழுவிய அளவில் மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட மஜக சார்பில் #நீதிகேட்டு_போராட்டம் நடைபெற்றது.
பல்வேறுபட்ட சமூகங்களை சார்ந்த
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை தூக்கிய படியே நின்றனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த சாலை வழியே சென்ற பொது மக்களும் ஆங்காங்கே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர்.
வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் சூழ்ந்த முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தனர்.
சிறுமி ஆஷிபாவின் உடலை போன்று வடிவமைத்து கைகளிலேந்தி சாலையில் மஜகவினர் ஊர்வலமாக வந்ததை பார்த்த மக்கள் கண் கலங்கினர்.
மேலும் குற்றவாளிகள் போன்ற வேடம் தரித்து முகமூடி அணிவித்து தூக்கு கயிற்றை மாட்டி நால்வரை மஜகவினர் அழைத்து வந்ததை ஆங்காங்கே குழுமியிருந்த மக்களும், வாகனங்களில் சென்றவர்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
மஜக கிணத்துகடவு பகுதி செயலாளர் A.ஹாருண்ரஷீது அவர்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர் அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் PM.முகம்மதுரபீக், ABT.பாருக், ATR.பதுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மஜக மாநில துணை செயலாளர் புளியங்குடி செய்யது அலி அவர்கள் கண்டன உரையாற்றினார் கள்.
மாவட்ட அணி நிர்வாகிகள் பைசல், அபு, செய்யது இப்ராஹீம், அப்பாஸ், சம்சுதீன், அக்பர், அன்வர், நூருல் அமீன், மன்சூர், சபீர், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, கிணத்துகடவு பகுதி நிர்வாகிகள் காதர், அபு, மற்றும் நிர்வாகிகள் பூ காஜா, கமால், காஜா உசேன், அப்பாஸ், ரஹ்மத்துல்லா, ஜமால், சமீர், பூ அபு, ஆகாயோரும் கலந்து கொண்டனர்.
இந்தஆர்ப்பாட்டத்தில் 700க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
22.04.18