சென்னை.ஜூலை.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கொள்கை விளக்கக் கூட்டம் கடந்த (27/07/2018) வெள்ளிக்கிழமை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பால்பூத் பகுதியில் நடைபெற்றது. இக்கொள்கை விளக்கக் கூட்டத்தில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் I.இப்ராஹீம் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் S.அன்வர் இப்ராகிம் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் P.M.சாகுல் ஹமீது அவர்களும் வரவேற்புரை நடத்தினர். இக்கூட்டத்தில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் என்.ஏ.தைமிய்யா, ஜே.சீனி முஹம்மது, கொள்கை விளக்க பேச்சாளர் ஜே.எஸ் மீரான் அவர்களும் மத்திய அரசுக்கு எதிராகவும், நாட்டில் நடக்கும் பாசிஸ அரசியல் குறித்தும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கொள்கை விளக்க கூட்டத்தில் இறுதியாக பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உடல்நிலை பூரண குணமடைந்து சீக்கிரம் தமிழக மக்கள் மத்தியில் " என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே " என்ற வார்த்தை கேட்க பிரார்த்தனை செய்கிறோம், மற்றும் மத்திய பிஜேபி அரசு கபட நாடகத்தை பற்றி தெளிவாக
மஜக பொதுக்கூட்டம்
மஜக பொதுக்கூட்டம்
காவேரிக்காக போராடியவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA எச்சரிக்கை..!
சென்னை.ஏப்.14., திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் அம்பத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் "மத்திய அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்து" பொதுக்கூட்டம் நேற்று (13.04.2018) நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மஜக அவைத்தலைவர் நாசர் உமரீ, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் A.S.அலாவுதீன், மாநிலச் செயலாளர்கள் சீனி முகம்மது, தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், சமீம் அஹமது, தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட செயலாளர் ஆனையூர் அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் பூவை அப்துல் காதர், மாவட்ட துணைச் செயலாளர் மதுரவாயல் சுலைமான் , மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கரிமுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியபோது. காவேரி உரிமைக்காக தன்னெழுச்சியாக தமிழர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் மீது காவல்துறை வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருந்த என்னையும்,மற்ற தலைவர்களையும் பார்ப்பதற்காக வந்த எங்கள் கட்சியின் பொருளாளர் #ஹாரூன்_ரஷீது உள்ளிட்ட 8 பேரை பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளியுள்ளனர். இதுபோல பல கட்சியினரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விடுதலை
MKP கத்தார் மண்டல ஆலோசனை கூட்டம்..!
கத்தார்.ஜன.14., மனிதநேய கலாச்சார பேரைவை (MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் (12.01.18) நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் உவைஸ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ், மண்டல துணைச் செயலாளர்கள் சகாப்தீன் மற்றும் பஷீர், பொருளாலர் யாசின், PRO.வாஜீத் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் பிற கட்சிகளில் இருந்து பல இளைஞர்கள் தங்களை மஜகாவில் இணைத்துக்கொண்டார்கள். இணைப்பு நிகழ்ச்சிக்கு, பின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர் வரும் பிப்ரவரி-15 அன்று கத்தாரில் MKP சார்பில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட மாநாட்டிற்கு தலைப்பு “திருப்புமுனை மாநாடு” என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கத்தார் மண்டல MKP பணிகளை துரிதப்படுத்தி, போர்கால அடிப்படையில் செயல்பட சகோதரர் மீசல் சையத் கனி அவர்களுக்கு மக்கள் தொடர்பு செயலாளராக நியமனம் செய்வது என மண்டல செயலாளர் முன் மொழிந்ததை மண்டல நிர்வாகிகள் அனைவரும் வழிமொழிந்தனர். தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் 12.01.2018
வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!
வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக), அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 12.01.18
முகவையில் முத்தலாக் விவகாரம்…! திரண்டது மக்கள் வெள்ளம்..!!
முகவை.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் உரையாற்றினர். இதில் பல்லாயிரகணக்கானோர் திரண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_கிழக்கு_மாவட்டம். 05.01.2018