You are here

மனிதநேய கலாச்சார பேரவை துபை மண்டலத்தின் தேரா கிளை மிகுந்த எழுச்சியோடு நிறுவப்பட்டது..

மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக செயல்படும் #மனிதநேய_கலாச்சார_பேரவையின் துபை மண்டலத்தில் தேரா கிளை கூட்டம் 11-9-2016 வெள்ளி அன்று நடைபெற்றது.

#மண்டல_செயலாளர்_யூசுப்ஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  அமீரக ஊடக செயலாளர் #ஜியாவூல்_ஹக், துபை மண்டல பொருளாளர் #பசூர்_இஸ்மாயில்_பாபு, மண்டல துணை செயலாளர் #கடலங்குடி_ஹர்பின்,  மண்டல IKP செயலாளர் #லால்பேட்டை_சபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துபை மண்டலத்தின் #தேரா_கிளை #பகுதி_செயலாளராக_பரீத் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.

பலரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தேரா கிளையின் சார்பில் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் நடத்துவது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் இறுதியாக மண்டல IKP செயலாளர் சபீக் நன்றி கூற கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நிறைவு பெற்றது.

ஏற்கனவே துபை மண்டலத்தில் ஹோரல் அன்ஸ், அல்-கூஸ், மற்றும் மம்ஜார் கிளை பகுதி செயலாளர்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-மனிதநேய கலாச்சார பேரவை
துபை மண்டல ஊடக பிரிவு.

Top