அமீரகம்.மே.07., கடந்த வெள்ளிக்கிழமை (04-05-2018) அன்று அபுதாபி மண்டல மஜகவின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) செயற்குழு கூட்டம் மண்டல செயலாளர் ஹாஜி. S.A.முஹம்மது தையூப் தலைமையில் மாலை 6 அளவில் நடைபெற்றது. இதில் அபுதாபி மண்டல நிர்வாகிகள் மற்றும் பனியாஸ், அபுதாபி சிட்டி, முஸாப்பாஹ் உள்ளிட்ட கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் அமீரக துணை செயலாளர் அடியற்கை. லியாகத் அலி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். சிறப்பாக நடைப்பெற்ற இச்செயற்க்குழு கூட்டத்தில் கீழ் காணும் விசயங்கள் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. 1. புனித ரமலான் மாதத்தில் அமீரகம் வருகை தரும் மஜக பொதுச்செயலாளரம் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, அபுதாபியில் பிரம்மாண்ட இப்தார் நிகழ்ச்சி நடத்துவது. 2. மண்டல செயலாளர் ஹாஜி. S.A. முஹம்மது தையூப் தலைமையில் அடியற்கை. தமீமுன் அன்சாரி, கொல்லாபுரம் யாசிர், நரசிங்க பேட்டை பக்கீர் முஹம்மது, லால்பேட்டை பதஹூல்லாஹ் உள்ளிட்டோர் அடங்கிய இப்தார் குழு அமைப்பது. 3. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி பொதுச்செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைப்பது. 4. ஒவ்வொரு மாதமும் கிளை வாரியாக கூட்டங்கள் நடத்துவது. 5. இப்தார் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்த தொண்டர் அணியை அமைப்பது. இறுதியில்
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
MKP கத்தார் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம்..!
தோஹா.மே.05., மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று (04.05.2018) நடைபெற்றது. இக்கூட்டம் கத்தார் மண்டல செயலாளர் முஹம்மத் உவைஸ் தலைமையில் நடைபெற்றது.கத்தார் பொருளாளர் ஆயங்குடி முஹம்மது யாசீன், கத்தார் ஆலோசகர் கீழக்கரை ஹூசைன், கத்தார் ஒருங்கிணைப்பாளர் நெல்லை KST அப்துல் அஜீஸ், கத்தார் துணைச் செயலாளர்கள் தைக்கால் சகாபுதீன் , மீசல் செய்யது கனி, சந்கேந்தி சமீர் அஹ்மத், துஹைல் மண்டல செயலாளர் அத்திக்கடை ஹாஜி முஹம்மது ( தளபதி ), சனையா மண்டல பொருளாளர் காட்டுமன்னார்கோயில் ஓலியுல்லா, அத்திக்கடை பாரூக் ( பல்க் ), துஹைல் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் நெல்லை ஷாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கத்தார் நிர்வாக பணிகள், மண்டலங்கள் செயல்பாடுகள், வருகின்றி ரமலான் மாதத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்படது.தீர்மானங்கள் :1. வருகிற 1 /6/2018 வெள்ளியன்று தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக மஜக மாநில பொருளாளர் #எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது மற்றும் மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மவ்லவி #JS_ரிபாஃயி_ரஷாதி ஆகியோர்களை அழைத்து கத்தார் MKP சார்பாக மாபொரும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது
மஜக 3ஆம் ஆண்டு துவக்க விழா.! கத்தாரில் MKP சனாயா மண்டலம் நடத்திய இரத்த தான முகாம்…!!
கத்தார்.ஏப்.23., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மூன்றாம் ஆண்டு துவாக்கத்தை முன்னிட்டு அதன் வெளிநாடுகள் பிரிவான #மனிதநேய _கலாச்சார_பேரவை (MKP) கத்தார் சனாயா மண்டலம் #இரத்த_தான முகாம் சார்பில் நடைபெற்றது. இரத்த தான முகாமை #கத்தார் அலோசகர் கீழக்கரை ஹூசைன் துவக்கிவைத்தார். சனாயா மண்டல செயலாளர் நூர் முஹம்மத் தலைமை தாங்கினார். இதில் சனாயா மண்டல பொருளாளர் காட்டுமன்னார் கோயில் ஓளியுள்ளா, துஹைல் மண்டல செயலாளர் ஹாஜ் முஹம்மத், தோஹா மண்டல செயலாளர் பொதக்குடி புர்ஹானுதீன், சனாயா மண்டல துணை செயலாளர் முத்துப்பேட்டை யூனுஸ், அணி Al million நிர்வாகிகளாகிய திருமங்களம் சுந்தர்., வீரபாண்டி, மேலும் கத்தார் செயலாளர் உத்தமபாளையம் உவைஸ், கத்தார் பொருளாளர் ஆயங்குடி யாசீன், கத்தார் ஒருங்கிணைப்பாளர் நெல்லை KST அப்துல அஜீஸ், துணை செயலாளர்கள் தைக்கால் சகாபுதீன், புதுமடம் பைஸல், மீசல் செய்யது கனி, சந்கேந்தி சமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பல தோழமைச்சகோதரர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மிகவும் ஆர்வத்துடன் இரத்ததானம் கொடுத்தனர். தகவல் : #MKP_IT_WING #MKP_சனாயா_மண்டலம் #கத்தார்_மனிதநேய_கலாச்சார_பேரவை
மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம்..!
அமீரகம்.ஏப்.22., மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP) அமீரக செயற்குழு கூட்டம் இறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த 20-04-2018 அன்று ஜெபல்அலியில் அமீரக துணை செயலாளர் சகோ Y.அப்துல் ரெஜாக் அவர்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறியது. கூட்டத்திற்கு அமீரக செயலாளர் சகோ.மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அமீரக பொருளாளர் சகோ. அதிரை அஸ்ரப் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அமைப்பின் எதிர்கால திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இறைவன் நாடினால் எதிர்வரும் ரமலானில் மஜக பொது செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும், ரமலானில் பிஃத்ரா, சதக்கா, ஜகாத் வசூல் செய்வது குறித்தும், தலைமை நிர்வாகிகளை (தாயிகள்) அழைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியாக அமீரக துணை செயலாளர் சகோ.நாச்சிகுளம் A.அசாலி அஹ்மத் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவேறியது. தகவல்: #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING_UAE #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை ஐக்கிய அரபு அமீரகம்.
தேமுதிக நிர்வாகி மஜகவில் இணைந்தார்..
துபை. ஏப்.14., ஐக்கிய அரபு அமீரகம் தேமுதிக துபை பிரிவின் அவைத்தலைவராக இருந்த B.ரஹ்மத்துல்லா அவர்கள் மனிதநேய கலாச்சார பேரவை அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தார். இவ்வரவேற்பு நிகழ்வில் MKP அமீரக துணை செயலாளர்கள் H.அபுல் ஹசன்,Y.அப்துல் ரெஜாக்,ஊடக செயலாளர் Y.M.ஜியாவுல் ஹக்,அபுதாபி மண்டல துணை செயலாளர் J.S.ஹக்கீம்,துபை மண்டலத்தை சேர்ந்த அதிரை சாகுல் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; MKP_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #ஐக்கிய_அரபு_அமீரகம்.