MKP கத்தார் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம்..!

தோஹா.மே.05., மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று (04.05.2018) நடைபெற்றது. இக்கூட்டம் கத்தார் மண்டல செயலாளர் முஹம்மத் உவைஸ் தலைமையில் நடைபெற்றது.கத்தார் பொருளாளர் ஆயங்குடி முஹம்மது யாசீன், கத்தார் ஆலோசகர் கீழக்கரை ஹூசைன், கத்தார் ஒருங்கிணைப்பாளர் நெல்லை KST அப்துல் அஜீஸ், கத்தார் துணைச் செயலாளர்கள் தைக்கால் சகாபுதீன் , மீசல் செய்யது கனி, சந்கேந்தி சமீர் அஹ்மத், துஹைல் மண்டல செயலாளர் அத்திக்கடை ஹாஜி முஹம்மது ( தளபதி ), சனையா மண்டல பொருளாளர் காட்டுமன்னார்கோயில் ஓலியுல்லா, அத்திக்கடை பாரூக் ( பல்க் ), துஹைல் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் நெல்லை ஷாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கத்தார் நிர்வாக பணிகள், மண்டலங்கள் செயல்பாடுகள், வருகின்றி ரமலான் மாதத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்படது.தீர்மானங்கள் :1. வருகிற 1 /6/2018 வெள்ளியன்று தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக மஜக மாநில பொருளாளர் #எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது மற்றும் மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மவ்லவி #JS_ரிபாஃயி_ரஷாதி ஆகியோர்களை அழைத்து கத்தார் MKP சார்பாக மாபொரும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது எனவும்.,2. எதிர்வரும் 31/0 5/2018 வியாழன் அன்று துஹைல், சனையா, தோஹா ஆகிய மூன்று மண்டலங்கள் இணைந்து தர்பியா மட்டும் சஹர் நிகழ்ச்சி நடத்துவது.ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தகவல்;#MKP_IT_WING

#மனிதநேய_கலாச்சார_பேரவை

#MKP_கத்தார்

04.05.2018