எதிர்வரும் ரமலானை நல்லிணக்கம் வளர்க்க பயன்படுத்தவேண்டும்..! நெய்வேலி பள்ளியில் மஜக பொதுச்செயலாளர் ஜும்ஆ உரை..!!

கடலூர்.மே.05., நேற்று (04.05.18) கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள #மஸ்ஜிதே_ரஹ்மத் பள்ளியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் ஜும்ஆ சிறப்புரை ஆற்றினார்.

அந்த உரையில், எதிர்வரும் ரமலானில் 30 நாட்களிலும், பள்ளிவாசல்களில் அந்தந்த ஊரைச் சார்ந்த சகோதர சமுதாயங்களை சேர்ந்தவர்களை அழைத்து நல்லெண்ண கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்றும், இப்தார் நிகழ்ச்சிகளில் அன்போடு அவர்களை உபசரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்த ரமலானில் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் . முயற்சிகளை ஜமாத்துக்களும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் முன்னெடுக்க வேண்டும் என்றும் திருக்குர்ஆனின் அறிவுரைகளை எல்லா மக்களுடனும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பிறகு ஜமாத் நடத்தும் அர் ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வருகை தந்தார். அங்கு +2 தகுதி உயர்வை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அதன் பிறகு நெய்வேலி நிலக்கரி அனுமின் நிலைய பொதுமேலாளர் திரு.ஞானசேகரன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். திரு. ஞானசேகரன் அவர்கள் பொதுச்செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பிறகு உள்ளூர் பிறமுகர்களையும், இதர பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் (OBC) வீரவன்னியராஜா உள்ளிட்டோரையும் சந்தித்தார்.

பிறகு மஜக மாநில து. செயலாளர் பல்லாவரம் ஷபி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு புறப்பட்டார்.

இச்சந்திப்பின் போது மாநில விவசாயணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராகிம், மாவட்ட து.செயலாளர் முஹம்மது யூசுப், நகர செயலாளர் OAK நூர் முஹம்மது, மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ரியாஸ் ரஹ்மான், மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் மன்சூர், நகர து. செயலாளர் PS ரஹ்மான் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்