மஜகவின் தொடர் முயற்சியால் இளையன்குடியில் சமுத்திர ஊரணி தூர்வாரும் பணி துவங்கியது..!!

image

image

சிவகங்கை.செப்.23., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நீர் நிலைகளை தூர்வார கோரிய தொடர் முயற்சியின் பயனாக
சமுத்திர ஊரணியை தூர்வாரும் பணி நேற்று இனிதே துவங்கியது.

நிலத்தடி நீர்குறைந்த இளையான்குடி நகரில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்து வருகிறது. அதன் தொடக்கமாக நீர்நிலைகளை மாசுபடுத்தும் காட்டுகருவேல மரங்களை அப்புரப்படுத்தும் முயற்சியில் பெரியகண்மாயின் கரைகளில் உள்ள காட்டுகருவேல மரங்களை தூரோடு அகற்றும் பணியினை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அரசின் உதவியுடன்  அகற்றியது.

நகரின் மத்தியில் உள்ள புதர்மண்டி கிடந்த தெய்வபுஸ்ப ஊரணியை சுத்தம் செய்ய அரசை வலியுறுத்தி டெண்டர் பெற்று சமூக ஆர்வலர் தப்பாத்தை சாகுல் அவர்களுக்கு உதவியது.

அதன் தொடர்ச்சியாக மஜக நகர செயலாளர் உமர் கத்தாப் அவர்களின் தொடர் முயற்சியின் காரனமாக கண்மாய்கரை சமுத்திர ஊரணியை சமூக ஆர்வலர்களின் பொருளாதார உதவியுடன் தூர்வார சிவகங்கை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுந்தர மூர்த்தி அவர்களும், மஜக தலைமை ஒருங்கினைப்பாளர் மௌலா.முகம்மது நாஸர் அவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஊரணி தூர்வாரும் நிகழ்சியில் கூட்டுறவு நகர வங்கி தலைவரும் முன்னால் பேரூராட்சி தலைவருமான நஜ்முதீன் அவர்களும், இளையான்குடி வட்டாட்சியர் கண்னதாசன் அவர்களும், காவல் ஆய்வாளர் பாலாஜி அவர்களும், பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகம்மது அவர்களும் கலந்து கொண்டனர்.

இதில் மஜக மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், துனை செயலாளர் அப்துல் ரஹ்மான், பசீர் அஹமது, ஜமால் முகம்மது, செய்யது மஹபு, கான்சா சிராஜ், சகுபர் சாதிக், முத்து முகம்மது மற்றும் உதயம் நண்பர்கள் ஜாகிர் உசேன், கலீம் மற்றும் ஏராலமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்.
22.09.17