
சென்னை.செப்.23., மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம் இனப்படுகொலையை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மியான்மரில் இனப்படுகொலையை அரங்கேற்றும் ஆங் சாங் சூகியின் உருவப்படத்தை மனிதநேய சொந்தங்கள் எரித்து கண்டன முழக்கம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, A.சாதிக் பாட்ஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், திருமங்களம் சமீம், சைபுல்லாஹ், பல்லாவரம் ஷபி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், மீனவர் அணிச் மாநில செயலாளர் பார்த்திபன், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹிர், அப்துல் காதர், யூசுப், மாவட்ட நிர்வாகிகளான பிஸ்மில்லாஹ் கான், நாசர், சிந்தா மதார், ரஹ்மத்துல்லாஹ், அக்பர் ஹுசைன், இக்பால் முன்னாள் மாவட்ட நிர்வாகி அஜீம் ஆகியோர் பங்கேற்றனர்.
மனிதநேய சொந்தங்கள், பொதுமக்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர்களான பீர் முகம்மது, ரவூப் ரஹீம், அமீர் அப்பாஸ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை
23.09.17