துபையில் Mkp இஃப்தார் அன்பளிப்புகள் MKP மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்..

ஏப்ரல் 27, ஐக்கிய அரபு அமீகம் துபாயில் இந்தியர்களுக்கு மத்தியில் பல்வேறு மனிதநேய சேவைகளை ஆற்றி வரும் மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இன்று ரமலானை முன்னிட்டு, இஃப்தார் உணவு பைகள் வழங்கப்பட்டது.

ஹோர் அல் அன்ஸ் பகுதியில் ஆசிய தொழிலாளர்கள் நிறைந்த இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.

பிரியாணி,ஷவர்மா, பழங்கள், மோர், பழரசங்கள், தண்ணீர் உள்ளிட்ட பொருட்களுடன் உணவு பைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது மனநிறைவு தருவதாக பொதுச் செயலாளர் கூறியதோடு, துபாய் MKP மனிதநேய சொந்தங்களை வெகுவாக பாராட்டினார்.

இந்நிகழ்வில் துபாய் MKP பொருளாளர் லால்பேட்டை பயாஸ், கீழக்கரை இப்ராகிம், திட்டச்சேரி அய்யூப், திட்டச்சேரி சித்திக், திட்டச்சேரி ஹாஜா நஜ்முதீன் நாச்சிக்குளம் ராஷிது, காயல் சபீர், காரைக்கால் முகம்மது அப்துல் ஜப்பார் , சமூக ஆர்வலர்கள் சீர்காழி அன்வர், மதுரை ரபீக், வடகரை நூருல்லா,ரமேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தகவல்,

#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#ஐக்கிய_அரபு_அமீரகம்