ஏப்ரல் 29., பலஸ்தீன மக்களின் சுதந்திரம், சுயமரியாதை, மண்ணுரிமை ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து உலகமெங்கும் அல் குத்ஸ் தினம் என்ற பெயரில் உலக மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ரமலானிலும் , அதன் கடைசி வெள்ளிக்கிழமை இது முன்னெடுக்கப்படுகிறது.
அமைதி பேரணிகள், ஒன்றுகூடல்கள் , கருத்தரங்குகள் என பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், ஜியோனி இஸ்ரேலியர்களுக்கு எதிராகவும் ஜனநாயக வழியில் பரப்புரைகள் நடைபெறுகின்றன.
இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சுதந்திர பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது வீட்டு வாசலில் பதாகை ஏந்தினார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
29.04.2022