வறுமை ஒழிந்து வளங்கள் பெருகட்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்து செய்தி!

முஸ்லிம்களின் வாழ்வில் இன்பம் பொங்கும் மாதமாக ரமலான் திகழ்கிறது.

இம்மாதம் முழுக்க நோன்பிருந்து;பிரார்த்தனைகளில் திளைத்து ; உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி; ஏழைகளுக்கு செல்வங்களை வாரி வழங்கி ; அதன் வழியாக ஈகைத்திருநாளை கொண்டாடி மகிழும் பூரிப்புக்கு எல்லைகள் இல்லை.

சுவையான உணவுகள் அருகில் இருந்தும்; அண்டை அயலார் யாரும் இல்லாத நிலையிலும் கூட ; இறைவனால் நாம் கண்காணிப்படுகிறோம் என்ற பக்தியுணர்வோடு நோன்புகளை கழிக்கும் பொழுதுகள் உன்னதமானவை.

மனங்களை மலரச் செய்யும் புனித ரமலான் மாதத்தை நிறைவு செய்து, ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத்திருநாளை உலகம் எங்கும் வாழும் சுமார் 200 கோடி மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

நமது இந்திய திருநாட்டில் பல் சமூக மக்களின் வாழ்த்துக்களோடு இத்திருநாள் மணம் வீசுகிறது.

இந்நன்னாளில் வறுமை ஒழிந்து ; வளங்கள் பெருக இறைவனிடம் பிரார்த்திப்போம்.

அமைதியும், சமாதானமும் பரவி, சகோதரத்துவம் வளர உறுதியேற்போம்.

ஈகைத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,

மே 2, 2022
ஹிஜ்ரி 1443