தமிழக ஹாஜிகள் வருகை..! மஜக பொதுச் செயலாளர் வரவேற்றார்..!!

image

image

image

சென்னை.செப்.23., தமிழக ஹஜ் கமிட்டி சார்பில் புனித மெக்காவுக்கு யாத்திரை சென்று திரும்பிய ஹாஜிகள் தாயகம் திரும்புகின்றனர்.

இன்று விடிகாலை 1மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹாஜிகளை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)  பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வரவேற்று நலம் விசாரித்தார்.

பயணங்கள் குறித்த நிறை, குறைகளையும் கேட்டறிந்தார், ரோஜாப் பூக்களின் புன்னகையோடும், அன்று பிறந்த குழந்தைகளைப் போன்ற பூரிப்போடும் திரும்பிய ஹாஜிகளுக்கு சவூதி அரசு வழங்கும் 5லிட்டர் ஜம் ஜம் தண்ணீரையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் வடபழனி இமாம் தர்வேஸ் ரஸாதி, மஜக மாநில செயலாளர் தைமிய்யா, மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வெளியே ஹாஜிகளை வரவேற்க குடும்பம், குடும்பமாக உறவினர்கள் காத்திருந்தனர். அவர்கள் மஜக பொதுச் செயலாளருக்கு கைக் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஹாஜிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விமான நிலைய ஊழியர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ்கள், விமான நிலைய காவலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுடப_அணி
#MJK_IT_WING
சென்னை
23.09.17