ஜூலை.07,
இன்று தமிழ்நாடு ஹஜ் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது.
இக்குழுவுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் தேர்வு நடைபெறும். அதன்படி மீண்டும் ஜனாப். A.அப்துல் ஜப்பார் அவர்கள் இதற்கு தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதில் zoom காணொளி வழியே மஜக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் குழு உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார்.
அப்போது தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு விமான நிலையம் அருகாமை பகுதியில் ஹஜ் இல்லம் கட்ட சட்டசபையில் தான் பேசியதையும், பிறகு மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை சந்தித்து இதற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டதையும், அவ்வாறே முதல்வர் அவர்கள் நிதி ஒதுக்கியுள்ளதையும் நன்றியுடன் நினைவு கூறுவதாகக் குறிப்பிட்டார்.
எனவே இதற்கு இடம் தேர்வு செய்து, காலம் தாழ்த்தாமல் புதிய ஹஜ் கட்டிடம் கட்ட, அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் தலைமையில் நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் மீண்டும் தமிழக ஹஜ் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டதற்காக அப்துல் ஜப்பார் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் முகம்மது ஜான் MP, அபுபக்கர் MLA,(zoom) ஜவஹர் அலி, லியாக்கத் அலி கான் உள்ளிட்ட குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்.