தூத்துக்குடி.செப்.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக)
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் சார்பில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றாதே என
வலியுறுத்தியும் காயல்பட்டினம் நகர செயலாளர் #S.M.ஜிப்ரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மஜக இணைப் பொதுச்செயலாளர்
K.M.முகமது மைதீன் உலவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய சமாதான பேரவை தலைவர் ஹாமித் பக்ரி மன்பயி,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன்,
நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை அப்துல் வாகித் ஆகியோர் கலந்து கொண்டு கன்டன உரை ஆற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீரா சாகிப், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ராசுகுட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் செய்யதுஅலி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை செயலாளர்
ராஜா முகம்மது ஆகிய ஜக நிர்வாகிகள் மற்றும்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் அபுல் ஹசன் கலாமி, SDPI கட்சியின் நகர நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியின் நகர நிர்வாகிகள், மஜக காயல்பட்டினம் நகர நிர்வாகிகள், ஆத்தூர் நகர நிர்வாகிகள் மற்றும் மஜக ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக தங்கள் உணர்ச்சிமிக்க எதிரிப்பை பதிவு செய்தனர்.
தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#காயல்பட்டினம்
#தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்.
22-09-2017.