மின் விபத்தில் பாதிக்கப்பட்ட மஜக சகோதரர்!மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது நேரில் சென்று நலம் விசாரித்தார்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாரிக், அவர்கள் கடந்த வாரம் பணியின் போது மின்சாரம் தாக்கியதில் விபத்துக்குள்ளாகி நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதை தொடர்ந்து நெல்லை வருகை தந்த மஜக வின் மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது, அவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரை நலம் விசாரித்தார், பின்னர் அவரின் பெற்றோர்களிடம் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

அவருடன் மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீது, தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகமது நஜிப், பொருளாளர் ராசுகுட்டி, மாவட்ட துணைச் செயலாளர் மீராசாஹிப், அய்யனார் ஊத்து அன்சாரி, சங்கரன் கோவில் பீர் மைதீன், ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
18.07.2021