அபுதாபி மண்டல MKP செயற்குழு கூட்டம்..!

அமீரகம்.மே.07., கடந்த வெள்ளிக்கிழமை (04-05-2018) அன்று அபுதாபி மண்டல மஜகவின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) செயற்குழு கூட்டம் மண்டல செயலாளர் ஹாஜி. S.A.முஹம்மது தையூப் தலைமையில் மாலை 6 அளவில் நடைபெற்றது.

இதில் அபுதாபி மண்டல நிர்வாகிகள் மற்றும் பனியாஸ், அபுதாபி சிட்டி, முஸாப்பாஹ் உள்ளிட்ட கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் அமீரக துணை செயலாளர் அடியற்கை. லியாகத் அலி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

சிறப்பாக நடைப்பெற்ற இச்செயற்க்குழு கூட்டத்தில் கீழ் காணும் விசயங்கள் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

1. புனித ரமலான் மாதத்தில் அமீரகம் வருகை தரும் மஜக பொதுச்செயலாளரம் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, அபுதாபியில் பிரம்மாண்ட இப்தார் நிகழ்ச்சி நடத்துவது.

2. மண்டல செயலாளர் ஹாஜி. S.A. முஹம்மது தையூப் தலைமையில் அடியற்கை. தமீமுன் அன்சாரி, கொல்லாபுரம் யாசிர், நரசிங்க பேட்டை பக்கீர் முஹம்மது, லால்பேட்டை பதஹூல்லாஹ் உள்ளிட்டோர் அடங்கிய இப்தார் குழு அமைப்பது.

3. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி பொதுச்செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைப்பது.

4. ஒவ்வொரு மாதமும் கிளை வாரியாக கூட்டங்கள் நடத்துவது.

5. இப்தார் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்த தொண்டர் அணியை அமைப்பது.

இறுதியில் துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

தகவல் :
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#ஐக்கிய_அரபு_அமீரகம்