You are here

மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம்..!

அமீரகம்.ஏப்.22., மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP)
அமீரக செயற்குழு கூட்டம் இறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த 20-04-2018 அன்று ஜெபல்அலியில் அமீரக துணை செயலாளர் சகோ Y.அப்துல் ரெஜாக் அவர்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறியது.

கூட்டத்திற்கு அமீரக செயலாளர் சகோ.மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அமீரக பொருளாளர் சகோ. அதிரை அஸ்ரப் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அமைப்பின் எதிர்கால திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இறைவன் நாடினால் எதிர்வரும் ரமலானில் மஜக பொது செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும்,

ரமலானில் பிஃத்ரா, சதக்கா, ஜகாத் வசூல் செய்வது குறித்தும், தலைமை நிர்வாகிகளை (தாயிகள்) அழைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இறுதியாக அமீரக துணை செயலாளர் சகோ.நாச்சிகுளம் A.அசாலி அஹ்மத் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவேறியது.

தகவல்:

#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING_UAE
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
ஐக்கிய அரபு அமீரகம்.

Top