சென்னை மண்டல நிர்வாகிகளுடன் சந்திப்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு..!

சென்னை மண்டலத்திற்குட்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வு தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று, நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

அவருடன் மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம். தாஜ்தீன், சீனி முகம்மது ஆகியோரும், மாநில துணைச் செயலாளர் பல்லாவரம் ஷஃபி, இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் உடனிருந்தனர்.

செங்கல்பட்டு வடக்கு, செங்கல்பட்டு தெற்கு, திருவள்ளுர் கிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மத்திய சென்னை மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று கட்சி பணிகள் குறித்து எடுத்து கூறினர்.

அடுத்த 3 மாதங்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், மாவட்ட பொதுக் குழுக்கள் நடத்துவது குறித்தும் பொதுச் செயலாளர் எடுத்து கூறினார். விரைவில் சென்னை மண்டல மாவட்டங்களின் செயற்குழு நடைபெறும் என்றும் அதில் கட்சி பணிகள் குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அடுத்து வட சென்னை, தென் சென்னை மாவட்ட சந்திப்பு நடைபெறும் என்றும் கூறினார்.

இந்த கலந்துரையாடல் மிகவும் உற்சாகமாக இருந்ததாக மாவட்ட நிர்வாகிகள் கூறினர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
11.08.2021