திண்டுக்கல்.ஜூலை.16: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூருக்கு உட்பட்ட பிலாத் கிராமத்தில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இனைத்துக் கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (15/07/2017) பிலாத்து பகுதியில் பொதுக்கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. முன்னதாக மஜக கொடியை கிராம மக்களின் எழுச்சி முழக்கத்தோடு தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா . M.நாசர் கொடி ஏற்றினார். பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மஜக மாநில பொருளாளர் SS.ஹாருன் ரசீது ஆகியோர் உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் பாஷா, அபி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் S.சுமதி, வடமதுரை ஒன்றிய செயலாளர் வேலுமணி, ஒன்றிய பொருளாளர் V.செல்வராஜ், வேடசந்தூர் ஒன்றிய பொருளாளர் பொன்னுச்சாமி, வடமதுரை ஒன்றிய மகளிர் அணி செயலாளர் J.ஜெரினா பேகம், மகளிர் அணி பொருளாளர் S.நாகலெட்சுமி, ஒன்றிய துணை செயலாளர் R.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் மரைக்காயர் சேட், S.சரவணன், S.ஜாபர், R.உமர் அலி, M.அனஸ் முஸ்தபா, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், A.சபியா பேகம், T.செல்வி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளளர் D.குனா உள்ளிட்டோர் சிறப்பான ஏற்ப்பாடுகளை செய்திருந்தனர். மஜக
Author: admin
உத்தமபாளையம் ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்று உரை!
தேனி. ஜூலை.15., தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில், கடந்த ரமலானில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த பெண்கள் மீது காவி மதவெறியர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர். இவ்விஷயத்தில் காவல்துறையினர் மீதும், காவி மதவெறியர்கள் தாக்குதல் நடத்தியத்தில் ஒரு காவல் அதிகாரியும் பாதிக்கப்பட்டார். இச்சம்பவங்களை கண்டித்தும், உண்மை குற்றவாளிகள் மீது வலிமையான நடவடிக்கை எடுக்க கோரியும், அப்பாவிகளை விடுவிக்க கோரியும், அமைதியை நிலைநாட்ட கோரியும் தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா முன்முயற்சியில் அனைத்து கட்சிகள், அமைப்புகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் உத்தமபாலையத்தில் நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, SDPI தலைவர் டெஹ்லான் பாகவி, INTJ துணை தலைவர் முனீர், முஸ்லீம் லீக் கேரளம் இடுக்கி மாவட்ட தலைவர் அப்துல் சமது , MMMK சார்பில் பாலை ரபீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் உரையாற்றினர். அப்போது M. தமிமுன் அன்சாரி பேசியபோது, உணர்ச்சிகளை யாரும் தூண்டக்கூடாது என்றும், பெரும்பான்மை மக்களையும், சிறுபான்மை மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் எல்லோரும் ஈடுபட வேண்டும் என்றும், அப்போது தான் தீய சக்திகளை புறக்கணிக்க முடியும் என்றும் கூறினார். தேனி மாவட்டத்தில் உள்ளூர் உளவுத்துறை அதிகாரிகளின் தவறான தகவல்களால் தவறான முடிவுகள்
காமராஜர் என்றும் கருப்பு தங்கம்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் சமூக வலைத்தள பதிவு...) ஏழைக்கு குடும்பத்தில் பிறந்து, தன் அர்ப்பணிப்பு வாழ்க்கையால் அரசியலில் உயர்ந்து, தமிழகத்தை மேன்மைப்படுத்தி, இந்திய அரசியலையே தீர்மானிக்கும் தலைவராக திகழ்ந்தவர் காமராஜர் ஐயா அவர்கள்...! அவரது ஆட்சி காலத்தில்தான் அதிகமான அணைகள் கட்டப்பட்டன. மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. தொழிற்சாலைகள் பெருகியது. மிக முக்கியமாக ஊர் தோறும் பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட்டன. இன்று பல சாதியினரும் சமத்துவ கல்வியை பெற அவரே முழுக்கரணமாக இருந்தார். சத்தமின்றி சமூக நீதியை அமல்படுத்தினார். ஏழை வீட்டு பிள்ளைகள் பசியின் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு வராமல் போவதை கண்டு மனம் வெதும்பினார். அதனால் பள்ளிக்கூடங்களில் இலவச மதிய உணவு திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக அமுல்படுத்தி சாதனை படைத்தார். அவர் காவி மதவெறி சக்திகளுக்கு எதிராக இருந்தார். மாட்டுக்கறி உண்பது குறித்து அவர் பகிரங்கமாக கூறிய கருத்து நாடெங்கும் வரவேற்பை பெற்றது. அதனால் கோபமடைந்த காவி மதவெறியர்கள் ஊர்வலமாக சென்று டெல்லியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு தீ வைத்தனர். நல்லவேளையாக அவர் நூலிலையில் உயிர் பிழைத்தார். கல்வி கண் திறந்த காமராஜரின் புகழை நாம் போற்ற
திருச்சியில் மஜக மாவட்ட அலுவலகம் திறப்பு..!
திருச்சி.ஜூலை.15., நேற்று திருச்சி மாவட்டம் காஜாமலை ஜே.கே நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் M.com அவர்கள் திறந்து வைத்தார்கள். முன்னதாக கட்சிகொடியை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகளும், திருச்சி மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும் நூற்றுக்கு மேற்பட்ட மஜகவினரும் பங்கேற்றார்கள். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING திருச்சி மாநகர் மாவட்டம். 14.07.2017
நீட் தேர்வுக்கு தற்காலிக தீர்வு தேவை! சட்டசபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!
(சிறுபான்மை மானியக் கோரிக்கையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கடந்த 13/07/17 அன்று பேசியது...) பாகம்-1 மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே! NEET தேர்வு குறித்து இந்த அவையிலே நான் இரண்டுமுறை பேசியுள்ளேன். மத்திய அரசு இவ்விஷயத்திலே ஒருவகையான போக்கைக் கையாளுகிறது. அதனால் தமிழ்நாட்டிலே மாணவ-மாணவிகள் பாதிக்கபட்டுள்ளனர். இந்த விவகாரங்களை நம்முடைய அம்மா அவர்களுடைய அரசு நிதானமாக கையாளுவதாக அமைச்சர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நான் அந்த உணர்வை பாராட்டுகின்றேன்; மதிக்கின்றேன். இந்த நேரத்திலே நான் ஒரு ஆலோசனையை முன் வைக்கக் கடமைபட்டிருக்கிறேன். இந்த பேரவையில்,அம்மா அவர்கள் இருந்தபோது,NEET தேர்வு குறித்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க கோரி இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை குடியரசுத் தலைவருடைய ஒப்புதலுக்கு அளிக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டிருக்கிறது. அதற்கு நம்முடைய மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். இந்த விவகாரத்திலே தேவையற்ற அரசியல் சர்ச்சைகளை உருவாக்காமல், தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுடைய நலன் காக்கபட வேண்டுமென்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கருத்தோடு இந்த விஷயத்தை அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். எப்படியென்று சொன்னால், இப்போதைக்கு தற்காலிகத் தீர்வாக, 2வகையான கேள்வித் தாள்களை மத்திய அரசு தயாரிக்க வேண்டும், அதாவது CBSE மாணவர்களுக்கு CBSE பாடத் திட்டத்தின்