(சிறுபான்மை மானியக் கோரிக்கையில் மஜக பொதுச்செயலாளர்
M.தமிமுன் அன்சாரி MLA கடந்த 13/07/17 அன்று பேசியது…)
பாகம்-1
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே!
NEET தேர்வு குறித்து இந்த அவையிலே நான் இரண்டுமுறை பேசியுள்ளேன். மத்திய அரசு இவ்விஷயத்திலே ஒருவகையான போக்கைக் கையாளுகிறது. அதனால் தமிழ்நாட்டிலே மாணவ-மாணவிகள் பாதிக்கபட்டுள்ளனர்.
இந்த விவகாரங்களை நம்முடைய அம்மா அவர்களுடைய அரசு நிதானமாக கையாளுவதாக அமைச்சர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நான் அந்த உணர்வை பாராட்டுகின்றேன்; மதிக்கின்றேன்.
இந்த நேரத்திலே நான் ஒரு ஆலோசனையை முன் வைக்கக் கடமைபட்டிருக்கிறேன்.
இந்த பேரவையில்,அம்மா அவர்கள் இருந்தபோது,NEET தேர்வு குறித்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க கோரி இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றை குடியரசுத் தலைவருடைய ஒப்புதலுக்கு அளிக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டிருக்கிறது.
அதற்கு நம்முடைய மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.
இந்த விவகாரத்திலே தேவையற்ற அரசியல் சர்ச்சைகளை உருவாக்காமல், தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுடைய நலன் காக்கபட வேண்டுமென்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கருத்தோடு இந்த விஷயத்தை அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
எப்படியென்று சொன்னால், இப்போதைக்கு தற்காலிகத் தீர்வாக, 2வகையான கேள்வித் தாள்களை மத்திய அரசு தயாரிக்க வேண்டும், அதாவது CBSE மாணவர்களுக்கு CBSE பாடத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு கேள்வித்தாளும், அதேபோல மாநில திட்டத்தின் அடிப்படையில் ஒரு கேள்வித்தாளும் தயாரித்து அதற்கேற்ப மாணவ மாணவிகளை பயிற்ச்சிக்கு நாம் தயார்படுத்த வேண்டும். இது ஒரு தற்காலிக தீர்வு.
இதுகுறித்து மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு பரிசீலிக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
தகவல்;
சட்டமன்ற வளாக செய்தியாளர்கள் குழு,
#MJK_IT_WING
15.07.2017