திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் மஜக தலைமையகத்தில் நடைப்பெற்றது.

மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணைச்செயலாளர் முஹம்மது அஸாருதீன் ஆகியோர் கட்சியின் வளர்ச்சி குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நிகழ்ச்சிகள், நிர்வாக சீரமைப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில் தொகுதிகள் மற்றும் மாவட்ட மாற்றங்கள் குறித்து தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்த்தில் மாவட்ட செயலாளர் S.M.நாசர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட துணைச்செயலாளர்கள் நிஜாம், மௌலானா, அன்சர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஷாஹின்ஷா, அப்ரார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.