தேனி. ஜூலை.15., தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில், கடந்த ரமலானில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த பெண்கள் மீது காவி மதவெறியர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர்.
இவ்விஷயத்தில் காவல்துறையினர் மீதும், காவி மதவெறியர்கள் தாக்குதல் நடத்தியத்தில் ஒரு காவல் அதிகாரியும் பாதிக்கப்பட்டார்.
இச்சம்பவங்களை கண்டித்தும், உண்மை குற்றவாளிகள் மீது வலிமையான நடவடிக்கை எடுக்க கோரியும், அப்பாவிகளை விடுவிக்க கோரியும், அமைதியை நிலைநாட்ட கோரியும் தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா முன்முயற்சியில் அனைத்து கட்சிகள், அமைப்புகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் உத்தமபாலையத்தில் நடைபெற்றது.
இதில் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, SDPI தலைவர் டெஹ்லான் பாகவி, INTJ துணை தலைவர் முனீர், முஸ்லீம் லீக் கேரளம் இடுக்கி மாவட்ட தலைவர் அப்துல் சமது , MMMK சார்பில் பாலை ரபீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் உரையாற்றினர்.
அப்போது M. தமிமுன் அன்சாரி பேசியபோது, உணர்ச்சிகளை யாரும் தூண்டக்கூடாது என்றும், பெரும்பான்மை மக்களையும், சிறுபான்மை மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் எல்லோரும் ஈடுபட வேண்டும் என்றும், அப்போது தான் தீய சக்திகளை புறக்கணிக்க முடியும் என்றும் கூறினார்.
தேனி மாவட்டத்தில் உள்ளூர் உளவுத்துறை அதிகாரிகளின் தவறான தகவல்களால் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது முதல்வரிடம் புகார் கூற இருப்பதாகவும் பேசினார்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
தேனி மாவட்டம்.
#MJK_IT_WING
15.07.2017