(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் சமூக வலைத்தள பதிவு…)
ஏழைக்கு குடும்பத்தில் பிறந்து, தன் அர்ப்பணிப்பு வாழ்க்கையால் அரசியலில் உயர்ந்து, தமிழகத்தை மேன்மைப்படுத்தி, இந்திய அரசியலையே தீர்மானிக்கும் தலைவராக திகழ்ந்தவர் காமராஜர் ஐயா அவர்கள்…!
அவரது ஆட்சி காலத்தில்தான் அதிகமான அணைகள் கட்டப்பட்டன. மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. தொழிற்சாலைகள் பெருகியது. மிக முக்கியமாக ஊர் தோறும் பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட்டன.
இன்று பல சாதியினரும் சமத்துவ கல்வியை பெற அவரே முழுக்கரணமாக இருந்தார். சத்தமின்றி சமூக நீதியை அமல்படுத்தினார்.
ஏழை வீட்டு பிள்ளைகள் பசியின் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு வராமல் போவதை கண்டு மனம் வெதும்பினார். அதனால் பள்ளிக்கூடங்களில் இலவச மதிய உணவு திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக அமுல்படுத்தி சாதனை படைத்தார்.
அவர் காவி மதவெறி சக்திகளுக்கு எதிராக இருந்தார். மாட்டுக்கறி உண்பது குறித்து அவர் பகிரங்கமாக கூறிய கருத்து நாடெங்கும் வரவேற்பை பெற்றது. அதனால் கோபமடைந்த காவி மதவெறியர்கள் ஊர்வலமாக சென்று டெல்லியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு தீ வைத்தனர். நல்லவேளையாக அவர் நூலிலையில் உயிர் பிழைத்தார்.
கல்வி கண் திறந்த காமராஜரின் புகழை நாம் போற்ற வேண்டுமெனில், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்க செய்யும் NEET தேர்வுக்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும்.
அவர் விதைத்த கல்வி விதையை பாதுகாக்க, நாம் வேலியாக மாற வேண்டும்.
இவண்.
M. தமிமுன் அன்சாரி MLA.
15.07.2017