மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக அ.அப்துல் வாஹித் (மேலப்பாளையம்) அவர்கள் நியமிக்கப்படுகிறார். அ.அப்துல் வாஹித். 1 வது தெரு. கரீம் நகர். மேலப்பாளையம். திருநெல்வேலி-627 005. இவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அன்புடன், எம்.தமிமுன் அன்சாரி பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 04.09.17
Author: admin
திருப்பூரில் மஜக ஆலோசனை கூட்டம்…!
திருப்பூர்.செப்.03., அரியலூர் சகோதரி அனிதா மரணம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. மஜக மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடந்த இந்தகூட்டத்தில் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய அரசின் சர்வாதிகார போக்கால் மருத்துவராக வேண்டிய ஓர் அப்பாவி மாணவி தன் உயிரை மாய்த்து கொண்டது குறித்து வருத்தத்துடன் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நவ்பில் ரிஜ்வான் அவர்கள். இந்த மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான படுபாதக நீட் தேர்வை இரத்து செய்யக்கோரியும், தமிழகத்தில் பெரும்பாலான கல்வியாளர்களும் மாணவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் தனது சர்வாதிகாரத்தை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அதன் செவிப்பறைகளை கிழிக்கும் விதமாக, திருப்பூர் மாவட்டம் சார்பாக வருகின்ற செவ்வாய்க்கிழமை 05_09_2017 அன்று திருப்பூரில் போராட்டம் செய்வது என முடிவுசெய்யப்பட்டது. மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து இறுதியாக "சகோதரி மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு" இரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மஜக மாநில செயற்குழு உறுப்பினர் இக்பால் அவர்கள், தகவல் தொழில்நுட்ப அணி மாநில
நாகையில் அமைதி திரும்புகிறது..!
நாகை. செப்.04., நேற்று நாகப்பட்டினத்தில் #நம்பியார்_நகர் மற்றும் #அக்கரைப்பேட்டை கிராம மீனவர்களுக்கிடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமுற்றனர். இதனால் நகரில் பதற்றம் உருவானது. உடனடியாக இது குறித்து அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அவர்களும், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட அதிரடிப்படையை வரவழைத்தனர். இரவு முழுக்க மாவட்ட எஸ்.பி அவர்களிடம் MLA அவர்கள் தொடர்பு கொண்டு அமைதி ஏற்படுத்தும் பணிகள் குறித்து விவாதித்தார். இன்று காலை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் ,நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் ,நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முகாமிட்டு அமைதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். அதன்பிறகு அமைச்சர் ஒ.எஸ்.மணியன்.கோபால் M.P, எம்.தமிமுன் அன்சாரி MLA, முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமுற்றவர்களை நலம் விசாரித்தனர். அதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். பிறகு அமைச்சர் ஒ.எஸ்.மணியன்,கோபால் M.P, தமிமுன் அன்சாரி MLA ,முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் ஆகியோர் திருவாரூர் மற்றும் தஞ்சாவூருக்கு சென்று காயம்பட்ட மீனர்வர்களை சந்திக்க புறப்பட்டனர். நாகையில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மஜக உதயம்!
திண்டுக்கல்.செப்.03., இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமையில், மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் S.சஹாப் தீன், கர்நாடகா மாநில பெங்களூர் மாநகர செயலாளர் K.M.J.பாபு, பொருளாளர் K.M.J.சல்மான் இவர்கள் முன்னிலையில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்த நிர்வாகிகளுக்கு கட்சியின் கொள்ளைகைகளை எடுத்து கூறிய பின்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் வேடசந்தூர் நகரத்தின் பொருப்பாளர்களாக S.இம்ரான், J.பிலால் முகமது, M.முஸ்தாக் ஆகிய மூவரும் நியமிக்கபட்டனர். இனி வரும் காலங்களில் சிறப்பாகவும், வீரியத்துடனும், சகோதரத்துடனும், கட்சியின் வளர்ச்சிக்கு பாடு படுவதாகவும், மேலும் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் உறுதிமொழி எடுத்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக்கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திண்டுக்கல்_மாவட்டம் 03_09_2017
அனிதாவின் படுகொலையை கண்டித்து சென்னையில் மஜக சாலை மறியல் – ஏராளமானோர் கைது..!
சென்னை.செப்.03., அரியலூர், குழுமூர் பகுதியை சேர்ந்த சகோதரி அனிதா 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் "நீட்" தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் நேற்று முன்தினம் (தற்)கொலை செய்துக் கொண்டார். மத்திய பாசிச மோடி அரசு கொண்டு வந்த நீட்டை கண்டித்தும், அனிதாவின் படுகொலையை கண்டித்தும் ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று மாலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஏராளமானோர் கைது செய்யப்படனர். மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, மாநிலச் செயலாளர்களான என்.ஏ.தைமிய்யா, சாதிக் பாட்சா , மாநிலத் துணைச் செயலாளர் சமீம், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் மற்றும், மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள், மாணவர்கள், இளைஞர்கள் உட்பட மனிதநேய சொந்தங்கள் உணர்ச்சிப்பூர்வமாக பங்கேற்று கைதாகினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சென்னை 03.09.17