நாகையில் அமைதி திரும்புகிறது..!

image

image

நாகை. செப்.04., நேற்று நாகப்பட்டினத்தில் #நம்பியார்_நகர் மற்றும் #அக்கரைப்பேட்டை கிராம மீனவர்களுக்கிடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமுற்றனர். இதனால் நகரில் பதற்றம் உருவானது.

உடனடியாக இது குறித்து அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அவர்களும், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட அதிரடிப்படையை வரவழைத்தனர்.

இரவு முழுக்க மாவட்ட எஸ்.பி அவர்களிடம் MLA அவர்கள் தொடர்பு கொண்டு அமைதி ஏற்படுத்தும் பணிகள் குறித்து விவாதித்தார்.

இன்று காலை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் ,நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் ,நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முகாமிட்டு அமைதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.

அதன்பிறகு அமைச்சர் ஒ.எஸ்.மணியன்.கோபால் M.P, எம்.தமிமுன் அன்சாரி MLA, முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமுற்றவர்களை நலம் விசாரித்தனர்.

அதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

பிறகு அமைச்சர் ஒ.எஸ்.மணியன்,கோபால் M.P, தமிமுன் அன்சாரி MLA ,முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் ஆகியோர் திருவாரூர் மற்றும் தஞ்சாவூருக்கு சென்று காயம்பட்ட மீனர்வர்களை சந்திக்க புறப்பட்டனர்.

நாகையில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கின்றன. போக்குவரத்து இயல்பு நிலையில் திரும்பி இருக்கிறது.

தகவல்:

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
04_09_17