திருப்பூர்.செப்.03., அரியலூர் சகோதரி அனிதா மரணம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
மஜக மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடந்த இந்தகூட்டத்தில் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மத்திய அரசின்
சர்வாதிகார போக்கால் மருத்துவராக வேண்டிய ஓர் அப்பாவி மாணவி தன் உயிரை மாய்த்து கொண்டது குறித்து வருத்தத்துடன் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நவ்பில் ரிஜ்வான் அவர்கள். இந்த மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான படுபாதக நீட் தேர்வை இரத்து செய்யக்கோரியும்,
தமிழகத்தில் பெரும்பாலான கல்வியாளர்களும் மாணவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும்
தனது சர்வாதிகாரத்தை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அதன் செவிப்பறைகளை கிழிக்கும் விதமாக, திருப்பூர் மாவட்டம் சார்பாக வருகின்ற செவ்வாய்க்கிழமை 05_09_2017 அன்று திருப்பூரில் போராட்டம் செய்வது என முடிவுசெய்யப்பட்டது.
மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து இறுதியாக
“சகோதரி மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு”
இரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மஜக மாநில செயற்குழு உறுப்பினர்
இக்பால் அவர்கள், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் வானவில் காதர், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆகாரம்.அக்பர் அலி அவர்கள், பெரிய தோட்டம் ரஹ்மான் அவர்கள், வெங்கமேடு மீரான் அவர்கள், திருப்பூர் மீரான் அவர்கள் மற்றும் பெரியதோட்டம் கிளை நிர்வாகிகள், கல்லூரி மாணவர் கார்த்திக் ஆகியோர்
கலந்து கொண்டனர்.!
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருப்பூர் மாவட்டம்.
03_09_2017