விவசாயிகளின் மீதான வழக்குகளை திரும்பபெற வேண்டும்.! முதமிமுன்அன்சாரி_MLAகோரிக்கை!

மானிய கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது…

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை இந்த அவையில் ஏற்கனவே நான் வரவேற்றுள்ளேன்.

இக்கோரிக்கை குறித்து நான் 3 முறை இந்த அவையில் வலியுறுத்தி பேசியுள்ளேன்.

அரசின் இந்த அறிவிப்புக்காகத்தான் மக்கள் போராடினார்கள். எனவே காவிரி, ஹைட்ரோ கார்பன் -மீத்தேன் எதிர்ப்பு ஆகியவற்றுக்காக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என பலரும் போராடி உள்ளனர். அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை எல்லாம் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியதும் உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு காமராஜ் அவர்கள் எழுந்து சில விளக்கங்களை கூறி, இது குறித்து முதல்வர் பரிசீலிப்பார் என்று கூறினார்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்