சென்னை.மார்ச்.21.,
இன்று சட்டசபையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் வரலாற்று சிறப்பு மிகு கோரிக்கை ஒன்றை சட்டசபையில் எழுப்பினார்.
அவர் பேசியதாவது…
ஆங்கிலேயர் ஆட்சியில் 1931-ஆம் ஆண்டு கடைசியாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் 1927 முதல் 1950 வரை 100 சதவீத இடஓதுக்கீடு அமலில் இருந்தது.
அது மீண்டும் தேவை. அதுதான் உண்மையான சமூக நீதியாகும். இட ஒதுக்கீடு பெறும் சமூகங்கள் அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் அதை பெறுகிறதா? என்பதற்கு அதுதான் அளவு கோலாக இருக்க முடியும்.
69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் “சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்” என கூறியுள்ளது.
இதை உணர்ந்ததால் தான் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி மஹாராஷ்டிரா சட்டப்பேரவையிலும், 11-ஆம் தேதி ஒரிசா சட்டப்பேரவையிலும் “2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.
இந்தியா முழுக்க சுமார் 7200-க்கும் அதிகமான சாதிகள் இருப்பதாக பல மாநில அரசுகள் கூறியுள்ள நிலையில், கல்வி, வேலை வாய்ப்பில், பொருளாதரத்தில் சமூக நீதி கிடைக்க, தமிழக சட்டமன்றத்திலும் அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA., முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA., திமுக-வின் பூந்தமல்லி (தனி) உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
தகவல் அறிந்து, பாமக நிறுவனர் மருத்துவர் திரு.ராமதாஸ் அவர்கள், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நல்ல கோரிக்கையை வலியுறுத்தியுள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார்.
தேசிய அளவில் லாலு பிரசாத், முலாயம் சிங், சரத்யாதவ் போன்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்கள் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர் என்பதும்,
இது மிக முக்கியமான சமூக நீதி கோரிக்கை என்பதும், இதை சில ஆதிக்க சக்திகள் புறக்கணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதை தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து தீர்மானங்கள் மூலம் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
21-03-2020