மலேசியாவில் தவிக்கும் இந்தியர்களை சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும்.! மலேசியா அமைச்சரிடம் பேசினார் மஜக பொருளாளர் எஸ்எஸ்ஹாரூன் ரசீது..!

மலேசியா.மார்ச்.23.,

உலகமுழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அச்சம் அடைந்து வரும் சூழலில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி முதல் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு விமானம் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு சுற்றுலா மற்றும் வியாபார நிமித்தமாக வந்த பயணிகள் தாய் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதேபோல், இந்தியாவிற்கு சென்று மலேசியா திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிகளை அழைத்துவர 19 மலேசிய சிறப்பு விமானங்கள் இந்தியாவிற்கு செல்கின்றன.

இந்நிலையில், இதற்கு ஏற்பாடு செய்யும் மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு

மலேசியாவில் இருந்து ஆள் இல்லாமல் இந்தியா செல்லும் சிறப்பு விமானத்தில் மலேசியாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்கள் நாங்கள் அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறோம் ஆனால் இந்திய அரசாங்கம் அனுமதி தர மறுக்கிறது என்று ஹாரூன் ரசீது அவர்களிடம் கூறினார்.

மலேசியாவில் தங்குவதற்கு இடம், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக கிடைக்காமல் அவதியுறும் இந்தியர்களை உடனடியாக அழைத்து வர இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
23-03-2020