கோவை.செப்.24., கோவையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் "பாஸிஸத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை பாதுகாப்போம்" என்ற முழக்கத்தோடு எழுச்சி மிகு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. கோவை மாநகரம் முழுக்க மஜகவின் கொடிகளும், பேனர்களும், விதவிதமான சுவரொட்டிகளும் ஒரு மாநாட்டை நினைவூட்டும் வகையில் இருந்தது. 7 மணிக்கெல்லாம் வின்சென்ட் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கட்டிடங்களின் மாடிகளில் மக்கள் கூட்டம் குடும்பம், குடும்பமாக நின்று வரவேற்றது. உணர்வுப்பூர்வமான தீர்மானங்களுடன் பொதுக்கூட்டத்தில் கவுண்டர் சமுதாய மக்களும், தேவர் சமுதாய மக்களும், முஸ்லிம் சமுதாய மக்களும், தலித் சமுதாய மக்களும் அண்ணன்-தம்பிகளாய் கூடி எழுச்சியை வெளிப்படுத்தியது. இது கோவையில் மிகப்பெரும் சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தும் விதமாக அமைந்தது. சங்பரிவார அமைப்புகள் அந்த மண்ணில் பிளவுகளை ஏற்படுத்திய காலம் போய், பல்வேறு சமுதாய மக்களும் சகோதரர்களாக ஒரு திருவிழாவில் ஒன்று கூடுவது போல கூடியிருந்தது. இந்த அரிய சாதனையை செய்த மஜகவை அனைவருமே பாராட்டினர். இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA
Author: admin
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கைபம்பு மற்றும் தரைதளம் அமைப்பு..!
ரோஹிங்யா மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்…! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சூளுரை…!!
சென்னை.செப்.23., மியான்மர் ராணுவத்தால் பாதிக்கப்படும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இந்தியாவின் அடைக்கலம் தர கோரியும், இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்கிய அகதிகளை அமைதி திரும்பும் வரை அங்கு திருப்பியனுப்ப கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் M.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... ரோஹிங்ய அகதிகளை ஏற்கமாட்டோம் என இந்திய அரசு கூறியிருப்பதும் ஏற்கனவே தங்கியிருக்கும் ரோஹிங்ய அகதிகளை திருப்பி அனுப்புவோம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுவதும் மியான்மர் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இனப்படுகொலையை கண்டிக்காததும் வெட்கமானது, கண்டனத்துக்குரியது. இந்தியா சகிப்புத்தன்மைக்காக பெர் போன தேசம். கெளவுதம புத்தரும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், காந்தியடிகளும், பிறந்த தேசத்தில் உயிருக்காக போராடி தஞ்சம் கேட்டு வரும் மக்களை அகதிகளாக அனுமதிக்க மாட்டோம் என்பதும் வேதனையளிக்கிறது. ஏற்கனவே வங்காளதேசம், திபத் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு அகதிகளாக புகலிடம் தந்தது போல, ரோஹிங்யா மக்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கிட வேண்டும். தனியரசு MLA பேசியதாவது... பௌத்த மதவெறி ஆசிய கண்டத்தை பாழ்படுத்துகிறது. பௌத்த மதவெறிதான் இலங்கையில் தமிழர்களை அழித்தது, இப்போது மியான்மரில் முஸ்லிம்களை அழிக்கிறது. உடனடியாக இந்திய அரசு தனது கடும்
பேரறிவாளன் பரோல் நீடிப்பு ! தமிழக அரசிற்கு மஜக நன்றி !
(மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையத்தள பதிவு..) சகோதரர் பேரறிவாளன் பரோல் கிடைக்க மஜக , கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய மூன்று கட்சிகளும் முன்னெடுத்த நகர்வுகள் முக்கிய காரணமாயிற்று நாங்கள் நேரில் சந்தித்தபோது அன்புத் தாய் அற்புதம்மாள் அவர்களும் சகோதரர் பேரறிவாளனும் கூறிய வார்த்தைகளும் எங்களுக்கு சிலிர்ப்பை தந்தது. அப்போது மேலும் பரோலை நீட்டித்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர் முயற்சி செய்கிறோம் என்றோம். கடந்த 20.09.17 அன்று தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை நாகப்பட்டினத்தில் நேரில் சந்தித்தபோது. இதுகுறித்து விரைவாக எடுத்துக் கூறினேன். நிச்சயமாக ஆவணம் செய்வதாகவும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசிப்பதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் அவர்களிடமும் கூறினேன். இன்று சகோ.பேரறிவாளனுக்கு பரோல் நீடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எமது கோரிக்கையை பரிசீலித்ததிற்க்காக தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவண்; M. தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 23.09.17
மஜகவின் தொடர் முயற்சியால் இளையன்குடியில் சமுத்திர ஊரணி தூர்வாரும் பணி துவங்கியது..!!
சிவகங்கை.செப்.23., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நீர் நிலைகளை தூர்வார கோரிய தொடர் முயற்சியின் பயனாக சமுத்திர ஊரணியை தூர்வாரும் பணி நேற்று இனிதே துவங்கியது. நிலத்தடி நீர்குறைந்த இளையான்குடி நகரில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்து வருகிறது. அதன் தொடக்கமாக நீர்நிலைகளை மாசுபடுத்தும் காட்டுகருவேல மரங்களை அப்புரப்படுத்தும் முயற்சியில் பெரியகண்மாயின் கரைகளில் உள்ள காட்டுகருவேல மரங்களை தூரோடு அகற்றும் பணியினை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அரசின் உதவியுடன் அகற்றியது. நகரின் மத்தியில் உள்ள புதர்மண்டி கிடந்த தெய்வபுஸ்ப ஊரணியை சுத்தம் செய்ய அரசை வலியுறுத்தி டெண்டர் பெற்று சமூக ஆர்வலர் தப்பாத்தை சாகுல் அவர்களுக்கு உதவியது. அதன் தொடர்ச்சியாக மஜக நகர செயலாளர் உமர் கத்தாப் அவர்களின் தொடர் முயற்சியின் காரனமாக கண்மாய்கரை சமுத்திர ஊரணியை சமூக ஆர்வலர்களின் பொருளாதார உதவியுடன் தூர்வார சிவகங்கை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுந்தர மூர்த்தி அவர்களும், மஜக தலைமை ஒருங்கினைப்பாளர் மௌலா.முகம்மது நாஸர் அவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊரணி தூர்வாரும் நிகழ்சியில் கூட்டுறவு நகர வங்கி தலைவரும் முன்னால்