ரோஹிங்யா மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்…! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சூளுரை…!!

image

சென்னை.செப்.23., மியான்மர் ராணுவத்தால் பாதிக்கப்படும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இந்தியாவின் அடைக்கலம் தர கோரியும், இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்கிய அகதிகளை அமைதி திரும்பும் வரை அங்கு  திருப்பியனுப்ப கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் M.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது…

ரோஹிங்ய அகதிகளை ஏற்கமாட்டோம் என இந்திய அரசு கூறியிருப்பதும் ஏற்கனவே தங்கியிருக்கும் ரோஹிங்ய அகதிகளை திருப்பி அனுப்புவோம்  என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுவதும் மியான்மர் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இனப்படுகொலையை கண்டிக்காததும் வெட்கமானது, கண்டனத்துக்குரியது.

இந்தியா சகிப்புத்தன்மைக்காக பெர் போன தேசம்.

கெளவுதம புத்தரும், திருவள்ளுவரும்,  விவேகானந்தரும், காந்தியடிகளும், பிறந்த தேசத்தில் உயிருக்காக போராடி தஞ்சம் கேட்டு வரும் மக்களை அகதிகளாக அனுமதிக்க மாட்டோம் என்பதும் வேதனையளிக்கிறது. ஏற்கனவே வங்காளதேசம், திபத் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு அகதிகளாக புகலிடம் தந்தது போல, ரோஹிங்யா மக்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கிட வேண்டும்.

தனியரசு MLA பேசியதாவது…

பௌத்த மதவெறி ஆசிய கண்டத்தை பாழ்படுத்துகிறது. பௌத்த மதவெறிதான் இலங்கையில் தமிழர்களை அழித்தது, இப்போது மியான்மரில் முஸ்லிம்களை அழிக்கிறது. உடனடியாக இந்திய அரசு தனது கடும் கண்டனத்தை மியான்மருக்கு தெரிவிக்க வேண்டும். இந்திய எல்லைகளை திறந்துவிட்டு ரோஹிங்யா அகதிகளுக்கு அடைக்கலம் தரவேண்டும். மியான்மரின் பௌத்த மதவெறியை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது.

ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்தது போல் ரோஹிங்யா மக்களுக்காகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

கருணாஸ் MLA பேசியதாவது…

முன்பு பர்மாவில் தமிழர்களை இப்படித்தான் விரட்டியடித்தார்கள், இப்போது ரோஹிங்யா மக்களை அடிக்கிறார்கள் “வாட்ஸ்அப்”பில் அந்த கொடூர காட்சிகளை பார்க்கும்போது கடும் வேதனையாக உள்ளது. மனித உரிமைகள் எங்கு மீறப்பட்டாலும் அதை நாங்கள் ஒன்று சேர்ந்து கண்டிப்போம். அதுதான் ஒளவையார் கூறிய தமிழர் பண்பாட்டின்படி எல்லோரும் செயல்படுவோம். ரோஹிங்யா மக்களுக்கு முக்குலத்தோர் புலிப்படை தொடர்ந்து குரல் கொடுக்கும்.

#தகவல்_தொகுப்பு
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி