கோவை.செப்.24., கோவையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் “பாஸிஸத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை பாதுகாப்போம்” என்ற முழக்கத்தோடு எழுச்சி மிகு
பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
கோவை மாநகரம் முழுக்க மஜகவின் கொடிகளும், பேனர்களும், விதவிதமான சுவரொட்டிகளும் ஒரு மாநாட்டை நினைவூட்டும் வகையில் இருந்தது.
7 மணிக்கெல்லாம் வின்சென்ட் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கட்டிடங்களின் மாடிகளில் மக்கள் கூட்டம் குடும்பம், குடும்பமாக நின்று வரவேற்றது.
உணர்வுப்பூர்வமான தீர்மானங்களுடன் பொதுக்கூட்டத்தில் கவுண்டர் சமுதாய மக்களும், தேவர் சமுதாய மக்களும், முஸ்லிம் சமுதாய மக்களும், தலித் சமுதாய மக்களும் அண்ணன்-தம்பிகளாய் கூடி எழுச்சியை வெளிப்படுத்தியது.
இது கோவையில் மிகப்பெரும் சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தும் விதமாக அமைந்தது. சங்பரிவார அமைப்புகள் அந்த மண்ணில் பிளவுகளை ஏற்படுத்திய காலம் போய், பல்வேறு சமுதாய மக்களும் சகோதரர்களாக ஒரு திருவிழாவில் ஒன்று கூடுவது போல கூடியிருந்தது.
இந்த அரிய சாதனையை செய்த மஜகவை அனைவருமே பாராட்டினர்.
இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA ஆகியோர் பலத்த ஆரவாரங்களுக்கிடையே உரையாற்றினார்கள்.
அது போல மஜக துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மஜக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், தலைமை நிலைய பேச்சாளர் திருப்பூர் ஹைதர் அலி போன்றோரும் பாஸிஸ எதிர்ப்பு உரையை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், துணைப் பொதுச் செயலாளர்கள் ஈரோடு. பாருக், மன்னை.செல்லசாமி, மதுக்கூர். ராவுத்தர்ஷா ஆகியோரோடு, மாநிலத் துணைச் செயலாளர்கள் கோவை.பஷீர், தோப்புதுறை ஷேக் அப்துல்லா, ஈரோடு பாபு, விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் வானவில் காதர் ஆகியோரும் பார்வையாளர்களாக வருகை தந்து சிறப்பித்தனர்.
கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ், பொருளாலர் பதுருதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாருக், TMS.அப்பாஸ், PM.ரபிக், சிங்கை சுலைமான், அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பாக உழைத்து கோவையில் மாபெரும் சமூக நல்லிணக்கத்தை கட்டிக் காக்கும் அற்புத பணியை செய்திருக்கிறார்கள்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING.
#கோவை_மாநகர்_மாவட்டம்
24.09.17