You are here

72வது குடியரசு தின மஜக நிகழ்ச்சிகள்.! நெல்லையில் மஜகவினர் தேசிய கொடியேற்றினர்.!


72வது குடியரசு தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் பேட்டை நகரம் சார்பாக இரண்டு இடங்களில் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் என்ற உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினர்.

நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அகிலபாரத விஸ்வகர்மா உறவுகள் நிறுவனர் வழக்கறிஞர் ஆறுமுகராஜ், இணை செயலாளர் SMS.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, மாவட்டதுணை செயலாளர் இரா.முத்துக்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் முருகேசன், புகாரி, பேட்டை நகர நிர்வாகிகள் ஐடிஐ சங்கர், அசன்கனி, மூர்த்தி, ஆதிமூலம், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பேட்டை நகர துணைசெயலாளர் சம்சுதீன் சிறப்பாக செய்திருந்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
26-01-2021

Top