
கோவை.செப்.25., கோவை குறிச்சிப்பிரிவு அருகே 60-ஆண்டுகளுக்கு மேலாக பல சமூக மக்கள் குடியிருந்து வருகிறார்கள்,
அண்மையில் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வெள்ளலூர் பகுதியில் அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்பட்டு அந்த மக்கள் அங்கு குடியமர்த்தப்பட்டனர்,
ஆனால் அங்கு மருத்துவம்,, போக்குவரத்து, தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லையென்றும் இடிக்கப்பட்ட வீடுகளில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி MLA அவர்கள் குறிச்சிபிரிவு பகுதிக்கு சென்று இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூறினார்.
மேலும் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிணத்துக்கடவு பகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
24.09.17