(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் சமூக வலைத்தள பதிவு...) ஏழைக்கு குடும்பத்தில் பிறந்து, தன் அர்ப்பணிப்பு வாழ்க்கையால் அரசியலில் உயர்ந்து, தமிழகத்தை மேன்மைப்படுத்தி, இந்திய அரசியலையே தீர்மானிக்கும் தலைவராக திகழ்ந்தவர் காமராஜர் ஐயா அவர்கள்...! அவரது ஆட்சி காலத்தில்தான் அதிகமான அணைகள் கட்டப்பட்டன. மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. தொழிற்சாலைகள் பெருகியது. மிக முக்கியமாக ஊர் தோறும் பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட்டன. இன்று பல சாதியினரும் சமத்துவ கல்வியை பெற அவரே முழுக்கரணமாக இருந்தார். சத்தமின்றி சமூக நீதியை அமல்படுத்தினார். ஏழை வீட்டு பிள்ளைகள் பசியின் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு வராமல் போவதை கண்டு மனம் வெதும்பினார். அதனால் பள்ளிக்கூடங்களில் இலவச மதிய உணவு திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக அமுல்படுத்தி சாதனை படைத்தார். அவர் காவி மதவெறி சக்திகளுக்கு எதிராக இருந்தார். மாட்டுக்கறி உண்பது குறித்து அவர் பகிரங்கமாக கூறிய கருத்து நாடெங்கும் வரவேற்பை பெற்றது. அதனால் கோபமடைந்த காவி மதவெறியர்கள் ஊர்வலமாக சென்று டெல்லியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு தீ வைத்தனர். நல்லவேளையாக அவர் நூலிலையில் உயிர் பிழைத்தார். கல்வி கண் திறந்த காமராஜரின் புகழை நாம் போற்ற
தமிழகம்
தமிழகம்
திருச்சியில் மஜக மாவட்ட அலுவலகம் திறப்பு..!
திருச்சி.ஜூலை.15., நேற்று திருச்சி மாவட்டம் காஜாமலை ஜே.கே நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் M.com அவர்கள் திறந்து வைத்தார்கள். முன்னதாக கட்சிகொடியை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகளும், திருச்சி மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும் நூற்றுக்கு மேற்பட்ட மஜகவினரும் பங்கேற்றார்கள். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING திருச்சி மாநகர் மாவட்டம். 14.07.2017
நீட் தேர்வுக்கு தற்காலிக தீர்வு தேவை! சட்டசபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!
(சிறுபான்மை மானியக் கோரிக்கையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கடந்த 13/07/17 அன்று பேசியது...) பாகம்-1 மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே! NEET தேர்வு குறித்து இந்த அவையிலே நான் இரண்டுமுறை பேசியுள்ளேன். மத்திய அரசு இவ்விஷயத்திலே ஒருவகையான போக்கைக் கையாளுகிறது. அதனால் தமிழ்நாட்டிலே மாணவ-மாணவிகள் பாதிக்கபட்டுள்ளனர். இந்த விவகாரங்களை நம்முடைய அம்மா அவர்களுடைய அரசு நிதானமாக கையாளுவதாக அமைச்சர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நான் அந்த உணர்வை பாராட்டுகின்றேன்; மதிக்கின்றேன். இந்த நேரத்திலே நான் ஒரு ஆலோசனையை முன் வைக்கக் கடமைபட்டிருக்கிறேன். இந்த பேரவையில்,அம்மா அவர்கள் இருந்தபோது,NEET தேர்வு குறித்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க கோரி இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை குடியரசுத் தலைவருடைய ஒப்புதலுக்கு அளிக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டிருக்கிறது. அதற்கு நம்முடைய மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். இந்த விவகாரத்திலே தேவையற்ற அரசியல் சர்ச்சைகளை உருவாக்காமல், தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுடைய நலன் காக்கபட வேண்டுமென்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கருத்தோடு இந்த விஷயத்தை அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். எப்படியென்று சொன்னால், இப்போதைக்கு தற்காலிகத் தீர்வாக, 2வகையான கேள்வித் தாள்களை மத்திய அரசு தயாரிக்க வேண்டும், அதாவது CBSE மாணவர்களுக்கு CBSE பாடத் திட்டத்தின்
மஜக இராமநாதபுர மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…
இராமநாதபுரம்.ஜூலை.15., நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் இராமநாதபுரத்தில் நடைப்பெற்றது. அதில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில பொதுச்செயலாளர், மாநில பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகளை வைத்து பரமக்குடி நகரில் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பொதுக்கூட்டம் மற்றும் கட்சிக்கொடிகள் ஏற்றுவது என ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் பரமக்குடி செய்யது இபுராகிம் மாவட்ட துணை செயலாளர்கள் மஞ்சூர் அப்துல் கபூர், இராமநாதபுரம் நசீர் ,மரைக்காயர் பட்டிணம் சோனாப்பூர் அஜ்மல் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் ; மஜக தகவல் தொழில்நுட்ப அணி இராமநாதபுரம் மாவட்டம். #MJK_IT_WING 14.07.2017
நா.காமராசன், நாகூர்அனீபா, மணவை முஸ்தபா, ஆகியோரை தமிழக அரசு சிறப்பிக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி சட்டசபையில் கோரிக்கை!
பேரன்பிற்குரிய மாண்புமிகு பேரவைத் துனை தலைவர் அவர்களே, தமிழுக்காக பாடுபட்ட தமிழறிஞர்களை நாம் தான் கௌரவிக்க வேண்டும். அந்தவகையிலே மறைந்த தமிழ் கவிஞர் நா.காமராசர் அவர்களை போற்றும் வகையில் அவரது கவிதை நூல்களை அரசுடைமையாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன். அதுபோல் அறிவியல் தமிழை வளர்த்து அதன் வழியாக 80 ஆயிரம் அறிவியல் தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்து செம்மொழித் தமிழுக்கு சிறப்பு சேர்த்து உலக தமிழர்களால் பாராட்டபட்ட தமிழறிஞர், மணவை முஸ்தபா அவர்களுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் நன்றிகடன் பட்டிருக்கிறது. அவரை கண்ணியபடுத்தும் வகையிலே அவர் பெயரால் சென்னையில் அறிவியல் தமிழ் ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை தமிழக அரசு நிறுவ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை... இந்த பாடல் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, ஏன் கடவுள் மறுப்பை கொள்கையாகக் கொண்ட அண்ணன் தனியரசு போன்றவர்களால் கூட வரவேற்க்ககூடிய, பாரட்டபடக்கூடிய ஒரு பாடல். இந்த பாடலை பாடியவர் நாகூர் அனிபா அவர்கள். அவரின் அரசியல் கருத்து வேறுபாடுகள் என்பது வேறு. ஆனால், அவர் தமிழை மையப்படுத்தி, உலகம் முழுக்க கொடுத்த குரல் என்பது சாதாரண விஷயமல்ல. புலவர் ஆதித்தனார் அவர்களுடைய வரிகளை பாடினார். "பாண்டியர் ஊஞ்சலில் அடி வளர்த்த