பேரன்பிற்குரிய மாண்புமிகு பேரவைத் துனை தலைவர் அவர்களே, தமிழுக்காக பாடுபட்ட தமிழறிஞர்களை நாம் தான் கௌரவிக்க வேண்டும்.
அந்தவகையிலே மறைந்த தமிழ் கவிஞர் நா.காமராசர் அவர்களை போற்றும் வகையில் அவரது கவிதை நூல்களை அரசுடைமையாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
அதுபோல் அறிவியல் தமிழை வளர்த்து அதன் வழியாக 80 ஆயிரம் அறிவியல் தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்து செம்மொழித் தமிழுக்கு சிறப்பு சேர்த்து உலக தமிழர்களால் பாராட்டபட்ட தமிழறிஞர், மணவை முஸ்தபா அவர்களுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் நன்றிகடன் பட்டிருக்கிறது.
அவரை கண்ணியபடுத்தும் வகையிலே அவர் பெயரால் சென்னையில் அறிவியல் தமிழ் ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை தமிழக அரசு நிறுவ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இறைவனிடம் கையேந்துங்கள்…
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…
இந்த பாடல் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, ஏன் கடவுள் மறுப்பை கொள்கையாகக் கொண்ட அண்ணன் தனியரசு போன்றவர்களால் கூட வரவேற்க்ககூடிய, பாரட்டபடக்கூடிய ஒரு பாடல்.
இந்த பாடலை பாடியவர் நாகூர் அனிபா அவர்கள். அவரின் அரசியல் கருத்து வேறுபாடுகள் என்பது வேறு. ஆனால், அவர் தமிழை மையப்படுத்தி, உலகம் முழுக்க கொடுத்த குரல் என்பது சாதாரண விஷயமல்ல.
புலவர் ஆதித்தனார் அவர்களுடைய வரிகளை பாடினார்.
“பாண்டியர் ஊஞ்சலில் அடி வளர்த்த பைந்தமிழ் அன்னையே…!
நீ எங்கள் அம்மா!’
என்று பாடி தமிழை சிறப்பு சேர்த்தார் நாகூர் அனிபா அவர்கள்.
“பட்டுமணத் தொட்டிலிலே…!
பூ மணக்கும் தென்றலிலே…!”
கொட்டும் பனி குளிரினிலே, கடல் விழி கரைதனிலே, உறங்குகிறாய் அண்ணா! நாங்கள் கலங்குகிறோம் மன்னா…!
என்று பேரரிஞர் அண்ணாவை நினைத்து உருகி பாடலைப் பாடியவர் நாகூர் அனிபா அவர்கள்.
அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலே நாகூர் கடற்கரையில் நூலகத்துடன், கேட்போர் அரங்கத்துடன் கூடிய மணிமன்டபத்தை நமது அம்மா அவர்களுடைய அரசு அமைத்துத் தரவேண்டு மென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
தகவல்;
சட்டமன்ற வளாக செய்தியாளர்கள் குழு,
மஜக தகவல் தொழிநுட்ப அணி,
சென்னை.
#MJK_IT_WING