ஜுன்.12., கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அவர்களை மஜக நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் அரசு மருத்துவ கல்லூரிக்கு தட்டுப்பாடில்லாமல் ஆக்ஸிஜன், உருளைகளை பெற்று கொடுத்ததற்கு மஜக சார்பில் தெரிவித்தனர். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் தன்னார்வலராக இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்ற மக்களுக்கு உரிய அங்கீகாரம் அரசு சார்பில் அளிக்க வேண்டும் உட்பட பல்வேறு மக்கள் நல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. கோரிக்கைகளை முழுமையாக நிறை வேற்றி தருவதாக அமைச்சர் உறுதியளித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜிப் ரஹ்மான், அமிர் கான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது ஷாஜித், ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கன்னியாகுமரி_மாவட்டம் 12.06.2021
Month:
மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும்!
#விருதுநகர்_மாவட்ட_ஆட்சியர்_அலுவலகத்தில்_மஜக_வினர்_மனு! கொரோனா தொற்று பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண நிதியாக பத்தாயிரம் ரூபாய், வழங்க வேண்டும் என விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, அவர்களை சந்தித்து இது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் தமிமுன்அன்சாரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருது_நகர்_மாவட்டம் 07.06.202
காசநோய் பணியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்!
#தமிழக_அரசுக்கு_மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_வேண்டுகோள்! தமிழக சுகாதாரத்துறையில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கடந்த 20 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய பணியாளர்களாக சேவையாற்றுபவர்கள், எந்த விதமான பணி பாதுகாப்போ,மருத்துவ காப்பீடு திட்டமோ இல்லாமல் காசநோய் ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று மாத்திரை வழங்குவது, சளி பரிசோதனை மற்றும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு வழங்குவது என களப்பணியாற்றி வருகிறார்கள். தற்போது உள்ள கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது,கொரோனா சிகிச்சை பெற்றவர்களுக்கு வீடுகளுக்கு சென்று சளி பரிசோதனைக்கான மாதிரிகள் பெறுவது என அயராது பணியாற்றி வருகிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் இப்பணியாளர்களில் இதுவரை 115 நபர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி,அதில் ஒரு நபர் பலியாகி உள்ளார். எனவே அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் , காசநோய் துறையில் பணிபுரியும் பணியாளர்களை முன் களப் பணியாளர்களாக அறிவித்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எந்தவொரு பணிப் பாதுகாப்பில்லாமல் பணி புரியும் 1659 பணியாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட, காலமுறை ஊதியத்தில் அவர்களை இணைத்திடவும் பரிசீலிக்க வேண்டுகிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 7.6.2021
மறைந்த விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் நினைவேந்தல் நிகழ்வு..!
#மஜக_மாநில_பொருளாளர்_எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது_பங்கேற்பு..!! சென்னை.ஜூன்.06., மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் குறித்தான நினைவேந்தல் நிகழ்ச்சி, காணொளி காட்சி மூலமாக (Zoom) விசிக தலைவர் தொல்.திருமாவளவன் MP அவர்கள் தலைமையில் கடந்த (04.06.2021) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு மறைந்த முஹம்மது யூசுப் அவர்களின் நினைவுகள் மற்றும் மஜக-விற்கும் அவருக்குமான தோழமையை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் விசிக தொண்டர்கள் நேரலை மூலமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 04.06.2021
உலமாக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்!
#தமிழக_அரசுக்கு_மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_கோரிக்கை! கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல தரப்பையும் தமிழக அரசு அடையாளம் கண்டு உதவி வருவது பாராட்டுக்குரியது. இவர்களில் உலமாக்கள், மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களும், அடங்குவர் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள் உள்ளிட்ட பள்ளி பணியாளர்கள், தர்ஹா பணியாளர்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவித்தொகையை இத்தருணத்தில் வழங்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வக்பு வாரியத்தின் மூலமாக இதற்கான ஏற்பாடுகளை செய்தால், சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவர். இதை கனிவுடன் பரீசீலிக்குமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 04.06.2021