மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது நேரில் வழங்கினார்.!! சென்னை.ஜூன்.23., சென்னை அடையாரில் செயல்பட்டு வரும் கேன்சர் இன்ஸ்டியூட்டிற்கு மருத்துவ தேவைக்காக தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் வருகை தருகிறார்கள். கேன்சர் இன்ஸ்டியூடின் அடிப்படை தேவைகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நன்கொடை வழங்க நேற்று (22.06.2021) மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நேரில் சென்று முதல்கட்டமாக காசோலை மூலமாக நன்கொடையை மருத்துவமனையின் டைரக்டர் சாகர் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் பசீர் அஹமது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 22.06.2021
Month:
தமுமுக மூத்ததலைவர் குனங்குடி ஹனிபா அவர்கள் மருத்துவமனையில் அனுமதி..! மஜக பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு..!!
சென்னை.ஜூன்.22., தமுமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான குனங்குடி ஹனிபா அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் பசீர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், வட சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் முஹம்மது அக்பர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்துல் ரஷீத், வட சென்னை மேற்கு மாவட்ட 35-வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, 34 வட்ட பொருளாளர் யாஸின், 35 வட்ட துணைச் செயலாளர் நாவஸ் கனி, துறைமுக பகுதி நிர்வாகிகள் அபூபக்கர், அசன் அலி ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 22.06.2021
கொரோனா காலத்தில் கடன் தவணைகளை கட்ட வற்புறுத்தும்! மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்! விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு!
ஜுன்.21., கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் விருது நகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்கள் கடன் தவணைகளை கட்ட வற்புறுத்தி பெண்களிடம் கடும் நெருக்கடிகள் கொடுத்து வருகின்றனர். எனவே இந்நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கடன் தவணைகட்ட கால அவகாசம் ஏற்படுத்தி தரக்கோரியும், விருது நகர் மாவட்ட ஆட்சியர் திரு.லோகநாத ரெட்டி, அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். இதில் மைக்ரோ பைனான்ஸ் நிறுனங்களின் அத்துமீறல்களை, தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க மஜக வினர் வலியுறுத்தினர். கோரிக்கைகளை கேட்ட ஆட்சியர் அவர்கள் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மஜக வினரிடம் கூறினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருது_நகர்_மாவட்டம் 21.06.2021
நெய்வேலி ஜமாஅத் தலைவர் மறைவு..!
#மஜக_மாநில_பொருளாளர்_எஸ்_எஸ்_ஹாருன்ரசீது_ஆறுதல்..! நெய்வேலி மஸ்ஜித் ரஹ்மத் பள்ளியின் தலைவர் S.M அபூபக்கர் சித்திக், அவரது மகன் SMA கமர் அவர்களும் சமீபத்தில் மரணம் அடைந்தனர். அவரது இல்லத்திற்கு மஜக மாநில பொருளாளர் எஸ்எஸ் ஹாரூன் ரசிது நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர், நெய்வேலி நகர செயலாளர் நூர் முஹம்மது, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாபர் அலி, நகர பொருளாளர் ஜாஹிர் ஹீசைன், ஒன்றிய துணை செயலாளர் ஆதம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மன்சூர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_வடக்கு_மாவட்டம்.
கோவை மாநகர காவல் துறை ஆணையருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!
ஜுன்.14., கோவையில் புதிதாக பொறுப்பேற்ற மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் கோவையில் மஜக ஆற்றி வரும் கொரோனா தடுப்பு, மற்றும் நிவாரண பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் காவல் துறை ஆணையர் கேட்டறிந்தார். மேலும் கோவையில் சில பகுதிகளில் இளைஞர்களை சீரழிக்கும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை ஆணையர் தெரிவித்தார். முன்னதாக சுகாதார பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர், ராஜகோபால் சுங்கரா, அவர்களையும், உளவுத்துறை உதவி ஆணையர் முருகவேல், உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகளை மஜக நிர்வாகிகள் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இதில் மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் பைசல் ரஹ்மான், ஆகியோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 14.06.2021