ஜுன்.12.,
கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அவர்களை மஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் அரசு மருத்துவ கல்லூரிக்கு தட்டுப்பாடில்லாமல் ஆக்ஸிஜன், உருளைகளை பெற்று கொடுத்ததற்கு மஜக சார்பில் தெரிவித்தனர்.
மேலும் கொரோனா காலக்கட்டத்தில் தன்னார்வலராக இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்ற மக்களுக்கு உரிய அங்கீகாரம் அரசு சார்பில் அளிக்க வேண்டும் உட்பட பல்வேறு மக்கள் நல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
கோரிக்கைகளை முழுமையாக நிறை வேற்றி தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜிப் ரஹ்மான், அமிர் கான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது ஷாஜித், ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கன்னியாகுமரி_மாவட்டம்
12.06.2021