பேராவூரணி.மே.24., தூத்துக்குடியில் நேற்றும், நேற்று முன்தினமும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து பேராவூரணியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட பொருப்பு குழு தலைவர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் கலந்து கொண்டு பேசினார். இதில் மஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் மரக்கவலசை ராஜ் முகமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பேராவூரணி அசார், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆதனூர் தினேஷ் , சேதுபாவசத்திரம் ஒன்றிய செயலாளர் சபிக்கான் மற்றும் பேராவூரணி மாணவரணி, இளைஞர்அணி மற்றும் நகர நிறுவாகிகள் அசார், அஜ்மல், ஆகிய மஜக மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர். இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள்புரட்சி கழகம், திராவிட விடுதலை கழகம் தமிழர் நல பேரியக்கம், மற்றும் பல கட்சியினர், அமைப்பினர் களந்துகொன்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம். 23.05.2018
Month:
தூத்துக்குடியில் அறவழியில் போராடிய மக்களை மீது துப்பாக்கி சூடு..! காவல்துறையை கண்டித்து மஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்..!!
சென்னை. 24., தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு பயங்கரவாதத்தை கண்டித்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இப்போராத்தில் மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் தலைமை தாங்கி, கண்டன உரையை நிகழ்த்தினார்கள். மஜக பொருளாளர் கண்டன உரையை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 1996 –ஆம் ஆண்டு முதல் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போராட்டம் மக்கள் திரள் போராட்டமாக வடிவம் பெற்று, எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த கோரிக்கை போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அரசு, கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி, 12க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக SNIPER’S என்னும் காவல் உடை அணியாத ஏவல் படையைக்கொண்டு, போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கொல்லப்பட்டது என்பது அப்பட்டமான அரசு படுகொலை. நிலத்தடி நீர் மாசு, , மலட்டுத்தன்மை, புற்றுநோய் , தோல் நோய் விவரிக்க முடியாத வியாதிகள் என தூத்துக்குடி சுற்றுவட்டார 18 கிராம மக்களின் துயரங்கள் வார்த்தைகளில் வர்ணிக்க
தூத்துக்குடி போராட்டக்காரர்கள் படுகொலை..! மஜகவினர் திருவண்ணாமலையில் சாலை மறியல்..!!
திருவண்ணாமலை.மே.23., தூத்துகுடியில் 12க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்று குவித்த தமிழக காவல்துறையை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக திருவண்ணாமலையில் நகர பொருளாளர் அம்ஜத்கான் தலைமையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் SL.செய்யது முஸ்தபா, மாவட்ட துனை செயலாளர் இன்தியாஸ் உசேன், நகர செயலாளர் அக்பர், நகர இளைஞர் அணி செயலாளர் தர்வேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் முழக்கமிட்டனர். திருவண்ணாமலை, கடம்பை, நகர நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் களந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்து கைதாக்கினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்
சிங்கப்பூரில் கலாச்சாரத்தை எதிரொலித்த ‘ஜாமியா’ இப்தார் நிகழ்ச்சி..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு..!!
சிங்கப்பூர்.மே.23., மொழிகள், இனங்கள், மதங்களுக்கு மத்தியில் சமுகநீதியை கடைபிடிக்கும் உன்னதமான தேசங்களில் சிங்கப்பூர் முதன்மையானது. அங்கே 'ஜாமியா' தொண்டு நிறுவனம் பாகுபாடின்றி அனைத்து சமூக மக்களுக்கும் பொது சேவையாற்றி வருகிறது. முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம், இலவச மருத்துவ(நர்ஸிங்) மையம், 'உலக குழந்தைகளுக்கான கிண்டர் கார்டான் வகுப்பு, MBA முதுநிலை கல்வியகம், மதரஸா, உள்பட 18 வகையான சேவை மையங்களை '#ஜாமியா' நடத்தி வருகிறது. 'உலக சமாதான தூதராக' வலம் வந்த உ.பி.மாநிலத்தின் மீரட்டை சேர்ந்த மௌலானா.அப்துல் அலீம் சித்திக் அவர்கள் தான் 1932-ல் இந்த தொண்டு நிறுவனத்தை சிங்கப்பூரில் தொடங்கினார். இன்று சிங்கப்பூர் அரசின் பேராதரவோடு ஆசியாவின் புகழ்பெற்ற தொண்டு நிறுவனமாக வளர்ந்துள்ளது. #இளவரசர்_சார்லஸ் போன்ற உலக தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், ஷாரூக்கானை போன்ற பிரபலங்கள் இங்கு வருகை தந்து இதன் பணிகளை பாராட்டி மகிழ்ந்துள்ளனர். இந்நிறுவனத்தை அபுபக்கர் மெய்தீன் அவர்கள் சிறப்புற வழிநடத்தி, தற்போது அவரது மகன் #டாக்டர்_ஹஸ்பி_அபுபக்கர்_மைதீன் அவர்களின் தலைமையில் இயங்கி வருகிறது. இவர்கள் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தின் கொடிக்கால் பாலையத்தை பூர்வீக பின்னணியாக கொண்டவர்கள் என்பது ஒரு கூடுதல் சிறப்பாகும். வருடந்தோறும் 'சமய நல்லிணக்க' நிகழ்வாக
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
திருவண்ணாமலை.மே.23., திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (22/05/2018) #மனிதநேய_ஜனநாயக_கட்சி திருவண்ணாமலை நகர செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி T.S பாலு திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நகர செயல்வீரர்கள் கூட்டத்திற்கும் , இப்தார் நிகழ்ச்சிக்கும் சிறப்பு அழைப்பளாராக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டார். மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களுக்கு வழி நெடுங்கிலும் இளைஞர்கள் வாகண பேரணியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் #ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் 100-வது நாளாக அமைதியாக போராடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் , துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12க்கும் மேற்பட்டோர் பலியானதை வருத்ததுடன் கண்டனம் தெரிவித்தார். பின்னர் T. S பாலு திருமண மண்டபத்தில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு நகர செயல்வீரர்கள் கூட்டம் நகர செயலாளர் அக்பர் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலாளர் K.காஜா ஷரிப், மாவட்ட பொருளாளர் S.L.செய்யது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைச் செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்