தூத்துக்குடியில் அறவழியில் போராடிய மக்களை மீது துப்பாக்கி சூடு..!  காவல்துறையை கண்டித்து மஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை. 24., தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு பயங்கரவாதத்தை கண்டித்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இப்போராத்தில் மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் தலைமை தாங்கி, கண்டன உரையை நிகழ்த்தினார்கள்.

மஜக பொருளாளர் கண்டன உரையை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 1996 –ஆம் ஆண்டு முதல் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போராட்டம் மக்கள் திரள் போராட்டமாக வடிவம் பெற்று, எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த கோரிக்கை போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அரசு, கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி, 12க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக SNIPER’S என்னும் காவல் உடை அணியாத ஏவல் படையைக்கொண்டு, போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கொல்லப்பட்டது என்பது அப்பட்டமான அரசு படுகொலை.

நிலத்தடி நீர் மாசு, , மலட்டுத்தன்மை, புற்றுநோய் , தோல் நோய் விவரிக்க முடியாத வியாதிகள் என தூத்துக்குடி சுற்றுவட்டார 18 கிராம மக்களின் துயரங்கள் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. 22 ஆண்டு காலமாக மக்களின் துயரத்துக்கு ஆறுதல் கூறவேண்டிய அரசு அம்மக்களுக்கு மரணத்தை பரிசாக தருவது அப்பட்டமான நீதி மறுப்பாகும்.

12 பேரின் உயிர் இழப்புக்கு பிறகாவது அரசு திருந்த வேண்டும், நாசகார ஆலையை மூடி இறந்து போன மக்களின் உயிர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும், என கேட்டுக்கொள்கிறோம்.

இப்போராட்டத்தில் மஜக மாநிலச் செயலாளர்கள் என்.ஏ.தைமிய்யா, அ.சாதிக் பாஷா, சீனி முஹம்மது, மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ், ஜே. ஷமீம் அகமது, தொழிலார் அணி மாநில செயலாளர் பம்மல் சலீம், மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அசாருதீன், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹ்மத், மற்றும் மாவட்ட, நகர , கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
23.05.2018.