திருவண்ணாமலை.மே.23., திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (22/05/2018) #மனிதநேய_ஜனநாயக_கட்சி திருவண்ணாமலை நகர செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி T.S பாலு திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நகர செயல்வீரர்கள் கூட்டத்திற்கும் , இப்தார் நிகழ்ச்சிக்கும் சிறப்பு அழைப்பளாராக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டார்.
மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களுக்கு வழி நெடுங்கிலும் இளைஞர்கள் வாகண பேரணியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் #ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் 100-வது நாளாக அமைதியாக போராடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் , துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12க்கும் மேற்பட்டோர் பலியானதை வருத்ததுடன் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் T. S பாலு திருமண மண்டபத்தில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு நகர செயல்வீரர்கள் கூட்டம் நகர செயலாளர் அக்பர் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலாளர் K.காஜா ஷரிப், மாவட்ட பொருளாளர் S.L.செய்யது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில துணைச் செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் N.அன்வர் பாஷா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செய்யது அபுதாஹிர், முஹம்மது யூசுப், தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் A.L.இம்தியாஸ் உசேன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜான் பாஷா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் S.K.சையத் நூர், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் அஹமது நூர், செங்கம் நகர செயலாளர் பாஷா,
கடம்பை நகர செயலாளர் ரஹமத்துல்லாஹ் மற்றும் செங்கம், திருவண்ணாமலை, கடம்பை, நகர நிர்வாகிகள் ஜமாத்தார்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நகர இளைஞர் அணி செயலாளர் தர்வேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியை நகர செயலாளர் அக்பர் அவர்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்
22.05.2018