சிங்கப்பூர்.மே.23., மொழிகள், இனங்கள், மதங்களுக்கு மத்தியில் சமுகநீதியை கடைபிடிக்கும் உன்னதமான தேசங்களில் சிங்கப்பூர் முதன்மையானது.
அங்கே ‘ஜாமியா’ தொண்டு நிறுவனம் பாகுபாடின்றி அனைத்து சமூக மக்களுக்கும் பொது சேவையாற்றி வருகிறது.
முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம், இலவச மருத்துவ(நர்ஸிங்) மையம், ‘உலக குழந்தைகளுக்கான கிண்டர் கார்டான் வகுப்பு, MBA முதுநிலை கல்வியகம், மதரஸா, உள்பட 18 வகையான சேவை மையங்களை ‘#ஜாமியா’ நடத்தி வருகிறது.
‘உலக சமாதான தூதராக’ வலம் வந்த உ.பி.மாநிலத்தின் மீரட்டை சேர்ந்த மௌலானா.அப்துல் அலீம் சித்திக் அவர்கள் தான் 1932-ல் இந்த தொண்டு நிறுவனத்தை சிங்கப்பூரில் தொடங்கினார்.
இன்று சிங்கப்பூர் அரசின் பேராதரவோடு ஆசியாவின் புகழ்பெற்ற தொண்டு நிறுவனமாக வளர்ந்துள்ளது. #இளவரசர்_சார்லஸ் போன்ற உலக தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், ஷாரூக்கானை போன்ற பிரபலங்கள் இங்கு வருகை தந்து இதன் பணிகளை பாராட்டி மகிழ்ந்துள்ளனர்.
இந்நிறுவனத்தை அபுபக்கர் மெய்தீன் அவர்கள் சிறப்புற வழிநடத்தி, தற்போது அவரது மகன் #டாக்டர்_ஹஸ்பி_அபுபக்கர்_மைதீன் அவர்களின் தலைமையில் இயங்கி வருகிறது. இவர்கள் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தின் கொடிக்கால் பாலையத்தை பூர்வீக பின்னணியாக கொண்டவர்கள் என்பது ஒரு கூடுதல் சிறப்பாகும்.
வருடந்தோறும் ‘சமய நல்லிணக்க’ நிகழ்வாக இதன் பல்வேறு மையங்களில் ‘#இப்தார்’ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் சிங்கப்பூரின் தலைவர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், பல்வேறு நாட்டு தூதர்கள் பங்கு பெற்று, இந்நிறுவனத்தின் பணிகளை பாராட்டி வருகின்றனர்.
2018- இப்தார் நிகழ்ச்சிக்கு #சிங்கப்பூரின்_தகவல்_தொழில்நுட்ப அமைச்சர் #திரு_ஈஸ்வரன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். அவருடன் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (#மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களும் ‘ஜாமியா’ நிர்வாகத்தின் சார்பில் அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்து அவரை, ஜாமியாவின் தலைவர் #அபுபக்கர்_மைதீன் அவர்களும், துணைத் தலைவர் #சலீம் அவர்களும் வரவேற்றனர்.
’தப்ஸ்’ மேளங்களை மலாய் இளைஞர்கள் முரசு கொட்டி எழுப்பி அமைச்சரையும், விருந்தினர்களையும் வரவேற்றனர்.
ஜாமியா நர்ஸிங் ஹோமில் (தாருல் ஷிவா) நடைபெற்ற இந்நிகழ்வில் ரமலானை வரவேற்று அங்கிருந்த முதியவர்கள் பாட்டுப்பாடி ‘தப்ஸ்’ முரசு கொட்டி , “நாங்கள் தனிமையில் இல்லை, மகிழ்ச்சியில் இருக்கிறோம்” என்பதை அனைவருக்கும் நினைவூட்டினர்.
மேடையில் இருந்த திரையில் ” ஜாமியா நர்ஸிங் ஹோமின்” முதியோர் மருத்துவ உதவி சேவைகள் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. அது மிகவும் நெகிழ்வாக இருந்தது.
அந்த ‘இஃப்தார்’ நிகழ்வில் அமைச்சர் ஈஸ்வரன் அவர்களும், தமிமுன் அன்சாரி MLA அவர்களும் சந்தித்து உரையாடினர் .
தமிழகத்தின் இன்றைய அரசியல் குறித்து அமைச்சர் ஈஸ்வரன் அவர்கள் மிகுந்த ஆவலோடு கேட்டறிந்தார். இருவரும் இந்திய அரசியல் குறித்து உரையாடினர்.
அதுபோல அங்கு வந்திருந்த பிரபல பௌத்த குரு #டாக்டர்_குணரத்தின அவர்களும், தமிமுன் அன்சாரி அவர்களும் இலங்கை அரசியல் குறித்து உரையாடினார். இது போன்ற கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள் இலங்கைக்கு அவசியம் என்று தமிமுன் அன்சாரி அவர்கள் அவரிடம் எடுத்து கூறினார்.
பௌத்த, கிருத்தவ, இந்து சமூக தலைவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் #சிங்கப்பூர்_நாராயணமிஷனின் C.E.O #தேவேந்திரன், சிங்கப்பூர் இந்திய வர்த்தக சபை தலைவர் #சந்துரு உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் வசதி குறைந்தவர்களுக்கான ‘ரமலான் அன்பளிப்பு பைகள்’ தேவையுடையவர்களுக்கு ‘ஜாமியா’ சார்பில் வழங்கப்பட்டது.
‘ஜாமியா’ வின் சேவைகளில் எல்லா சமூக, மத மக்களும் பயனடைவதால், இந்திய, சீனா, மலாய் இன பிரமுகர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிகள் முடிந்தபிறகு ஜாமியாவின் தலைவர் முகைதீன் அவர்களிடம் பேசிய மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட உங்களின் தலைமையால் ‘ஜாமியா’ நிறுவனம் ஆற்றிவரும் பணிகள் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு தாங்கள் அவசியம் வருகை தரவேண்டும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளருடன், காசிம் நெளதா, ‘கிரஸண்ட்’ யூசுப், தோப்புத்துறை தமீம், ஜர்ஜிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தகவல்;
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#சிங்கப்பூர்.