You are here

மஜக சார்பில் திருவல்லிகேணியில் 71வது சுதந்திரதின விழா..! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!

image

image

image

சென்னை.ஆக.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை திருவல்லிக்கேணியில் இந்திய தேசிய 71வது சுதந்திரதின விழா நேற்று நடைபெற்றது.

மாநில செயலாளர் சாதிக் பாஷா அவர்கள் மூவர்ண தேசிய கொடியேற்றி உணர்ச்சி ஊட்டும் முழக்கங்கள் முழங்கப்பட்டது.

மாநில செயலாளர் N.A. தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

கொடியேற்றிய பிறகு
மாநில செயலாளர் தைமியா அவர்களின் சுதந்திர தின உரை அனைவரையும் உத்வேகபடுத்துவதாகவும், பிறகு இரண்டு புறாக்களுக்கு சுதந்திரம் கொடுத்து வானில் பறக்கவிட்டது உச்சகட்டமாக அமைந்து பொதுமக்களை கவர்ந்தது. அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

இந் நிகழ்ச்சியில் மத்திய சென்னை மாவட்டம் சார்பாக மாவட்ட பெருளாளர் M.Y.பிஸ்மில்லா கான், மாவட்ட துணை செயலாளர்கள் M. H. பீர் முஹம்மத் மற்றும் ரவூப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமீர் அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் தாஹா, அன்வர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர், திருவல்லிகேணி பகுதி செயலாளர் பஷீர், பொருளாளர் அசன், துணை செயலாளர் முகம்மது அலி இஸ்ஹாக், நீலம் பாஷா நிர்வாகி ராஷிக் அலி, தி நகர் பகுதி செயலாளர் உஸ்தாத் ஆட்டோ கரீம், வில்லிவாக்க பகுதி செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட, துறைமுக, திருவல்லி கேணி பகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியை பகுதி பொருளாளர் அசன், பகுதி துணை செயலாளர் முகம்மது அலி இஸ்ஹாக் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
மத்திய சென்னை.
15.08.2017.

Top