ராஜபாளையத்தில் மஜக_நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்..!

மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்டம் மற்றும் சாஜர் அறக்கட்டளை, மதுரை ராக்ஸ் மருத்துவமனை & சம்மந்தபுரம் தேவர் திருமகனார் கலையரங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மருத்துவ முகாமை அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கே.வீரபுத்திரன் மற்றும் ஆர்.எஸ்.மோகன் ஆகியோர் முகாமை துவங்கி வைத்தனர்.

மாவட்ட துணை செயலாளர் ஹாபிழ் மகபூப்ஜான் அவர் தலைமையில், மாவட்ட செயலாளர் கண்மணி காதர் முன்னிலையில், மாவட்ட துணை செயலாளர் முத்துவேல் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த மருத்துவ முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.