(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு) சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிய ரயில்பாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருப்பதும் , இதற்கு தமிழக அரசும் ஒத்துழைப்பு நல்கும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருப்பதும் வரவேற்கதக்கது. சென்னை - மகாபலிபுரம் - பாண்டிச்சேரி - காரைக்கால் - நாகப்பட்டினம் - வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி - அதிராம்பட்டினம் - தொண்டி - இராமநாதபுரம் - கீழக்கரை - தூத்துக்குடி - காயல்பட்டினம் - கன்னியாகுமரி என வழித்தடம் அமைக்கப்பட வேண்டும். இதன் வழித்தடம் கடற்கரையிலிருந்து 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். என்பதில் மத்திய - மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும் . அப்போது தான் கடற்கரைப்பகுதி மக்களின் வணிகம் , போக்குவரத்து உள்ளிட்ட எதிர்பார்ப்புகளும் அதன் நோக்கமும் நிறைவேறும் . இதை தாமதிக்காமல் , ஐந்தாண்டு கால திட்டமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட வேண்டும் , என கேட்டுக் கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக
Month:
IKP சார்பாக திண்டுக்கல்லில் ஃபித்ரா விநியோகம்…
திண்டுக்கல்.ஜூன்.27., நேற்று முன்தினம் மஜகவின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை சார்பில் திண்டுக்கல்லில் ரம்ஜான் பண்டிகையை ஏழை, எளிய மக்கள் சிறப்பாக கொண்டாடும்வகையில் ஃபித்ரா எனும் தர்மம் பொருட்களாக 400 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் M. அன்சாரி , மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணை செயலாளர் A.அபி, மருத்துவ அணி மாவட்ட செயலாளர், காதர் ஒலி தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா, இளைஞரனி நகர செயலாளர் நிஸ்தார், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பிர்தெளஸ், மாவட்ட துணை செயலாளர்கள் முனாப்தீன், ஷாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு விநியோகம் செய்தனர். தகவல்; தகவல் தொழிநுட்ப அணி, திண்டுக்கல் மாவட்டம். 25.06.2017
தூத்துக்குடி (வ) மானங்காத்தானில் IKP சார்பில் ஃபித்ரா விநியோகம்…
தூத்துக்குடி.ஜூன்.27., நேற்று முன்தினம் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்காத்தானில் ஏழை எளிய சகோதர, சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட ஃபித்ரா தர்மம் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மானங்காத்தான் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு ஃபித்ரா பொருட்களை விநியோகம் செய்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை. மானங்காத்தான். தூத்துக்குடி (வ) மாவட்டம். 25.06.2017
இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக கடலங்குடியில் ஃபித்ரா வினியோகம்…!
மயிலாடுதுறை.ஜூன்.26., நேற்று நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியம், No.02, கடலங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வு முன்னாள் மாவட்ட துணை செயலாளர் A.J.சாகுல் ஹமிது, ஒன்றிய துணை செயலாளர் நிசார் அஹமது, கிளை பொருப்பாளர்கள் மரைக்கான் என்கிற சாகுல் ஹமீது, சாகுல் ஹமீது, ஷாஜஹான், பாபு, ஆசிக் ஆகியோர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை. கடலங்குடி நாகை(வடக்கு) மாவட்டம். 25.06.2017
தமிமுன் அன்சாரி MLA உடன் ஏனங்குடி கேதாரிமங்களம் ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு…!
நாகை. ஜூன்.25., நேற்று கேதாரிமங்களம் ஜமாத்திற்க்கு வருகைப்புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களை ஜமாத் நிர்வாகிகள் சந்தித்தனர். பிறகு புத்தாகரம் ஊராட்சிக்குட்ப்பட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. குறிப்பாக தண்ணீர் பிரச்சனை மின் விளக்கு, குப்பைதொட்டி, மையவாடி சுற்றுச்சுவர் போன்ற பிரச்சினைகளை கோரிக்கையை வைக்கப்பட்டது. உடனடியாக சம்மதப்பட்ட அதிகாரிகளை தொடர்புக்கொண்டு பணிகள் நடைபெற பேசினார். உடன் அதிமுக திருமருகல் ஒன்றிய செயலாளர் ஆர்.இராதாகிருட்டிணன், மஜக மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் வடகரை பரக்கதலி, மாவட்ட துனை செயலாளர் யூசுப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி யூசுப்தீன், ஒன்றிய செயலாளர் எ.முஜிபுர்ரஹ்மான் மற்றும் குவைத் மண்டல துணை செயலாளர் முஹம்மது பாசில் ஆகியோர் உடன் இருந்தனர் தகவல்:- தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. நாகை தெற்கு மாவட்டம் #MJK_IT_WING 24.06.2017