சென்னை – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலை இரயில் தடம் ! விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும்…

(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு)

சென்னை – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிய ரயில்பாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருப்பதும் , இதற்கு தமிழக அரசும் ஒத்துழைப்பு நல்கும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருப்பதும் வரவேற்கதக்கது.

சென்னை – மகாபலிபுரம் – பாண்டிச்சேரி – காரைக்கால் – நாகப்பட்டினம் – வேதாரண்யம் – திருத்துறைப்பூண்டி – அதிராம்பட்டினம் – தொண்டி – இராமநாதபுரம் – கீழக்கரை – தூத்துக்குடி – காயல்பட்டினம் – கன்னியாகுமரி என வழித்தடம் அமைக்கப்பட வேண்டும். இதன் வழித்தடம் கடற்கரையிலிருந்து 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். என்பதில் மத்திய – மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும் . அப்போது தான் கடற்கரைப்பகுதி மக்களின் வணிகம் , போக்குவரத்து உள்ளிட்ட எதிர்பார்ப்புகளும் அதன் நோக்கமும் நிறைவேறும் .

இதை தாமதிக்காமல் , ஐந்தாண்டு கால திட்டமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட வேண்டும் , என கேட்டுக் கொள்கிறோம் .

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
27.06.2017